மாமன்னன் வடிவேலுவால் அப்செட் ஆன உதயநிதி.. பிள்ளையார் பிடிக்க குரங்காய் மாறிய கதை

Actor Uthayanithi: மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி, வடிவேலு, கீர்த்தி சுரேஷ், பகத் பாசில் ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் தான் மாமன்னன். வரும் 29ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் தான் பிரம்மாண்டமாக நடைபெற்றது. கமல் உட்பட பல பிரபலங்கள் கலந்து கொண்ட அந்த நிகழ்வு படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகப்படுத்தியது.

மேலும் இதுவரை காமெடியனாக கலக்கி வந்த வடிவேலு இதில் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்றிருப்பதும் இந்த எதிர்பார்ப்புக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. இந்நிலையில் உதயநிதி வடிவேலுவால் கடும் அப்செட்டில் இருக்கிறதாம். தற்போது அரசியல் களத்தில் தீவிரமாக இறங்கி இருக்கும் அவர் இதுதான் தன்னுடைய கடைசி படம் என்று அறிவித்திருந்தார்.

அதனாலேயே இப்படம் தன் திரை வாழ்வில் முக்கியமான படமாக இருக்க வேண்டும் என அவர் இயக்குனருக்கு தனிப்பட்ட முறையில் கூறியிருந்தார். இருந்தாலும் தனக்கு மட்டுமே அந்த புகழ் வெளிச்சம் கிடைக்க வேண்டாம் எனவும் கூறியிருந்தார். அதன் காரணமாகவே வடிவேலுவின் கேரக்டர் கொஞ்சம் மெருகேற்ற பட்டிருக்கிறது. அதைத்தொடர்ந்து இப்போது மாமன்னன் படத்தில் அவருடைய கேரக்டர் எப்படி இருக்கும் என்பதை காண தான் ரசிகர்கள் அதிகமாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இதனால் உதயநிதியை கொஞ்சம் பின்னுக்கு தள்ளியது போல் கூறப்படுகிறது. இருந்தாலும் அவர் வடிவேலுவை முன்னிலைப்படுத்தியதில் எந்த மனதாங்கலையும் காட்டவில்லை. படம் நன்றாக வசூல் செய்து தன் பெயர் நிலைத்திருந்தால் போதும் என்ற எண்ணம் மட்டும்தான் அவருக்கு இருக்கிறது.

ஆனால் அவர் கட்டிய மனக்கோட்டை அனைத்தும் இப்போது சரியும் நிலையில் இருக்கிறதாம். அதாவது இயக்குனரை நம்பி முழு பொறுப்பையும் கொடுத்திருந்த அவருக்கு படத்தின் காட்சிகளை பார்த்து ரொம்பவே ஏமாற்றம் ஏற்பட்டிருக்கிறதாம். அதிலும் இயக்குனர் வடிவேலுவை தான் போகும் இடம் எல்லாம் புகழ்ந்து தள்ளி இருக்கிறார்.

அதுவே படத்திற்கான பெரும் பிரமோஷனாக இருக்கிறது. இந்த சூழலில் வடிவேலுவின் கதாபாத்திரம் திருப்திகரமாக அமையவில்லையே என்ற அப்செட்டில் இப்போது உதயநிதி இருக்கிறாராம். அந்த வகையில் பிள்ளையார் பிடிக்க குரங்காய் மாறிய கதையாக தான் இருக்கிறது. எனினும் படம் எதிர்பார்த்தது மாதிரி இல்லை என்றால் மீண்டும் ஒரு படத்தில் நடித்து தரமான ஒரு வெற்றியை பதிவு செய்துவிடலாம் என்ற யோசனையிலும் அவர் இருக்கிறாராம்.