உதயநிதி ஒரு ஹீரோ, தயாரிப்பாளர், அரசியல்வாதி என்பதை காட்டிலும் விநியோகஸ்தராக கலக்கி வருகிறார். தமிழ் சினிமாவில் வெளியாகும் பெரும்பான்மையான படங்கள் தற்போது உதயநிதி கைவசம் தான் செல்கிறது. அதுமட்டுமின்றி அஜித்தின் துணிவு படத்தையும் உதயநிதி தான் வெளியிடுகிறார்.
அதேபோல் விஜயின் வாரிசு படத்தை சென்னை மற்றும் செங்கல்பட்டு பகுதிகளில் உதயநிதி வெளியிடுகிறார். இவரை நம்பி படத்தை ஒப்படைத்தால் எந்த பிரச்சனை இல்லாமல் படம் நல்லபடியாக வெளியாகி லாபத்தில் சரியான பங்கு கிடைப்பதாக தயாரிப்பாளர்கள் கூறி வருகிறார்கள்.
உதயநிதி கடந்த வருடம் அக்டோபர் மாதத்தில் இருந்து தயாரிப்பாளர்களிடம் படத்தை வாங்கி விநியோகம் செய்து வந்தார். இந்த வருட அக்டோபர் உடன் கிட்டத்தட்ட ஒரு வருடத்தை வெற்றிகரமாக உதயநிதி நிறைவு செய்துள்ளார். மேலும் இந்த ஒரு வருடத்திற்குள் உதயநிதியால் தயாரிப்பாளர்களுக்கு 1200 கோடி கிடைத்துள்ளது.
இதில் 10% லாபம் மட்டும் உதயநிதிக்கு கிடைக்கும். அப்படியானால் ஒரு வருடத்தில் 120 கோடி வரை உதயநிதிக்கு கிடைத்துள்ளது. எந்த முதலீட்டும் இல்லாமல் படத்தை கைமாற்றி விட்டதால் உதயநிதிக்கு பெரும் தொகை கிடைத்துள்ளது.
இதனால் தயாரிப்பாளருக்கும் எந்த நஷ்டமும் இல்லை. இதுவே வேறு விநியோகஸ்தராக இருந்தால் தயாரிப்பாளர்களுக்கு 500 கோடி கூட தாண்டி இருக்காது என பலரும் கூறி வருகிறார்கள். அதுமட்டுமின்றி உதயநிதி உடனுக்குடன் பணத்தை செட்டில் செய்து வருகிறாராம்.
இதனால் தயாரிப்பாளர்களுக்கு பணம் நெருக்கடியும் வருவதில்லை. ஆகையால் உதயநிதியால் அடுத்தடுத்த வருடங்களும் தமிழ் சினிமாவில் உள்ள தயாரிப்பாளர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் என மகிழ்ச்சியாக இருக்கின்றார்களாம். உதயநிதி தான் மட்டுமல்லாமல் தன்னை நாடி வருபவர்களையும் லாபம் அடைய செய்கிறார்.