Udhayanithi Brother : கலைஞர் கருணாநிதியின் குடும்பம் மிகப்பெரிய அரசியல் ஆளுமை கொண்ட குடும்பமாக இருந்து வருகிறது. இதில் முக ஸ்டாலின் அவரது மகன் உதயநிதி என அனைவரும் இப்போது அரசியலில் களம் கண்டு வருகிறார்கள். அதேபோல் மற்றொருபுறம் மதுரையை தனது கட்டுப்பாட்டில் ஒரு காலத்தில் முக அழகிரி வைத்திருந்தார்.
அவரது மகன் துரை தயாநிதியும் அரசியல் மற்றும் சினிமா இரண்டிலுமே தனது பங்களிப்பை கொடுத்திருந்தார். ஒரு தயாரிப்பு நிறுவனம் மூலம் படங்களை தயாரித்து வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் நேற்றைய தினம் துரை தயாநிதி திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
அதாவது துரை தயாநிதி வீட்டில் இருக்கும்போது திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பம் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருக்கின்றனர். மேலும் இப்போது துரை தயாநிதியின் மருத்துவ அறிக்கை குறித்து சில தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
அவருக்கு மூளை ரத்த நாளங்களில் 6 அடைப்பு இருப்பதாகவும் அதோடு மட்டுமல்லாமல் மூளை பக்கவாத பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் உடனடியாக அறுவை சிகிச்சை நடத்த வேண்டும் என்று கூறப்படுகிறது. ஆனால் இது உண்மையா என்பது மருத்துவ அறிக்கை வெளியான பின்பு தான் அதிகாரப்பூர்வமாக தெரியவரும்.
அதோடு மட்டுமல்லாமல் நேற்று துரை தயாநிதியை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே முதலமைச்சர் முக ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பம் அவரை பார்க்க மருத்துவமனைக்கு விரைந்தனர். மேலும் துரை தயாநிதி விரைவில் குணம்பெற்று வீடு திரும்ப வேண்டும் என தொண்டர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.