ஜெயிலர் வசூலை லியோ முறியடிக்க கூடாது.. தந்திரமாய் காய் நகர்த்தும் ரெட் ஜெயண்ட் உதயநிதி

Jailer, Leo: இப்போது தமிழ் சினிமாவில் அதிக வசூல் செய்த படம் என்ற பெயரை சமீபத்தில் வெளியான ரஜினியின் ஜெயிலர் படம் பெற்றிருக்கிறது. இந்த அளவுக்கு இப்படம் வசூலை வாரி குவிக்கும் என்று ஜெயிலர் படத்தின் தயாரிப்பு நிறுவனர் கலாநிதி மாறன் கூட நினைத்திருக்க மாட்டார். இதனால் பரிசுகளையும் வாரி வழங்கி வருகிறார்.

சமீபத்தில் ஜெயிலர் படத்தில் பணியாற்றிய பிரபலங்களுக்கு தங்க காசு வழங்கிய நிலையில் சன் டிவி ஊழியர்களுக்கு வெள்ளி காசை பரிசாக கொடுத்திருக்கிறார். இந்த சூழலில் விஜய் மற்றும் லோகேஷ் கூட்டணியில் உருவாகி வரும் லியோ படம் கண்டிப்பாக ஜெயிலர் சாதனையை முறியடிக்கும் என சினிமா விமர்சகர்கள் பலரும் கூறி வருகிறார்கள்.

இந்த சூழலில் ஜெயிலர் வசூலை லியோ படம் முறியடிக்க கூடாது என தந்திரமாக காய் நகர்த்தி உள்ளார்கள். அதாவது கடைசியாக வெளியான வாரிசு படத்தை ரெட் ஜெயண்ட் நிறுவனத்திடம் விஜய் கொடுக்கவில்லை. கடைசியாக சென்னையில் மட்டும் இந்நிறுவனம் வாரிசு படத்தை விநியோகம் செய்தது.

மேலும் கலாநிதி மற்றும் உதயநிதியிடம் சிறந்த உறவு இருந்து வருகிறது. லியோ படமும் ரெட் ஜெயண்ட் நிறுவனத்திடம் போக வாய்ப்பே இல்லை. இதனால் தமிழக அரசு இப்போது 9 மணி காட்சியை தடை செய்திருக்கிறதாம். பெரிய நடிகர்களின் படங்கள் அதிகாலை காட்சி ஒளிபரப்பு செய்யப்படும்.

ஆனால் துணிவு படத்தின் போது ஏற்பட்ட அசம்பாவிதம் காரணமாக அதிகாலை காட்சியை ரத்து செய்தது. இதைத்தொடர்ந்து காலை 9:00 மணிக்கு பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகி வந்த நிலையில் இப்போது ஜெயிலர் வசூலை லியோ படம் முறியடிக்க கூடாது என்பதற்காக இந்த படத்திற்கு 9 மணி காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.

மேலும் ரஜினியின் ஜெயிலர் படம் காலை 9 மணிக்கு வெளியான நிலையில் திடீரென லியோ படத்திற்கு மட்டும் இவ்வாறு தடை விதிப்பது எப்படி நியாயம் என விஜய் ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள். இதனால் கண்டிப்பாக லியோ படத்தின் வசூல் பாதிப்படையும் என்று கூறப்படுகிறது.