அருண் விஜய்யால் அசிங்கப்பட்ட இயக்குனர்.. கொஞ்சம் நெஞ்ச இமேஜையும் டேமேஜ் செய்த தயாரிப்பாளர்

Arun Vijay Director: அருண் விஜய் என்ன தான் 90ல் ஹீரோவாக அறிமுகமாகி பல படங்களில் நடித்திருந்தாலும், முன்னணி நடிகராக வருவதற்கு இப்போ வரை படாத பாடுபட்டு வருகிறார். சமீப காலமாக நடிக்கும் படங்கள் தான் ஓரளவுக்கு மக்களிடம் ரீச் ஆகி நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் தற்போது இயக்குனர் பாலா இயக்கத்தில் வணங்கான் படத்தில் நடித்து வருகிறார்.

எப்படியும் இந்த படம் இவர் எதிர்பார்த்த அளவிற்கு நல்ல அந்தஸ்தை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் இவரை வைத்து எடுத்தால் அசிங்க தான் பட வேண்டும் என்று பல இயக்குனர்கள் தெறித்து ஓடி இருக்கிறார்கள். அதற்கு காரணம் இவரை வைத்து எடுக்கப்பட்ட ஒரு இயக்குனர் ரொம்பவே அசிங்கப்பட்டு இருக்கிறார்.

அதாவது இயக்குனர் ஏ வெங்கடேஷ், அருண் விஜய்யை வைத்து மாலை மலை மற்றும் மாஞ்சா வேலு போன்ற இரண்டு படங்களை எடுத்திருக்கிறார். இப்படம் எடுக்கும் பொழுது இயக்குனர் பணப்பிரச்சனையில் ரொம்பவே கஷ்டப்பட்டு இருந்திருக்கிறார். இதனால் ஷூ கூட வாங்க முடியாத அளவிற்கு வறுமையில் இருந்திருக்கிறார். அதாவது ஷூ வாங்க வேண்டும் என்று கடைக்கு போய் இருக்கிறார். அப்பொழுது இவருக்கு பிடித்த ஷூ ரேட் 2500.

Also read: அருண் விஜய் கையில் பெரியாரும், பிள்ளையாரும்.. வித்தியாசமான போஸ்டருடன் வணங்கான் பர்ஸ்ட் லுக்

ஆனால் அப்பொழுது அந்த காசை கொடுத்து வாங்க முடியாததால் 800 ரூபாய்க்கு ஷூ வாங்கி வீட்டிற்கு திரும்பி இருக்கிறார். அங்க போய் பார்த்தால் இவர் எதிர்பார்க்காத சர்ப்ரைஸ் கிப்ட் இருந்திருக்கிறது. அது என்ன என்று பார்த்தால் இவர் ஆசைப்பட்ட 2500 ரூபாய் ஷூ. இதை யார் வாங்கிக் கொடுத்தார் என்றால் அருண் விஜய்யை வைத்து எடுத்த படத்தின் தயாரிப்பாளர்.

அத்துடன் இவருக்கு தேவையான டிரஸ் அனைத்தையும் வாங்கி தயாரிப்பாளர் கொடுத்திருக்கிறார். இதையெல்லாம் பார்த்ததும் இயக்குனர் சந்தோஷத்தில் பூரிப்படைந்திருக்கிறார். ஆனால் இந்த சந்தோஷத்தை கொண்டாட முடியாத அளவிற்கு மிகவும் அசிங்கப்பட்டு இருக்கிறார். அதாவது படம் முடிந்த நிலையில் இயக்குனருக்கு தேவையான சம்பளத்தை தயாரிப்பாளர் கொடுத்திருக்கிறார். ஆனால் பேசின சம்பளத்தை விட ரொம்பவே கம்மியா கொடுத்திருக்கிறார்.

இதைப் பற்றி இயக்குனர் வெங்கடேஷ் தயாரிப்பாளரிடம் கேட்டிருக்கிறார். அதற்கு அவர் சொன்னது உங்களுக்கு ஷூ மற்றும் டிரஸ் எல்லாம் வாங்கி கொடுத்ததை எல்லாம் கழித்தது போக மீதமுள்ள சம்பளத்தை கொடுத்து இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார். இதை கேட்டதும் ரொம்பவே அசிங்கத்தில் அவமானத்தில் தலை குனிந்து எதுவுமே பேசாமல் இயக்குனர் வீட்டிற்கு திரும்பி விட்டார். அப்படிப்பட்ட தயாரிப்பாளர் யார் என்றால் அருண் விஜய்யின் மாமனார். அதனாலயே பல இயக்குனர்கள் அருண் விஜய்யை வைத்து படம் எடுப்பதற்கு முன்வரவில்லை.

Also read: இந்த 6 சினிமா பிரபலங்களுக்கு இடையே இப்படி ஒரு உறவா.? அருண் விஜய்க்கு தம்பி முறையாகவும் சஞ்சீவ்