Vijay-Rajini: சூப்பர் ஸ்டார் பட்டம் விஜய்க்கு பொருந்தும் என யாரோ கொளுத்தி போட்டது பூதாகரமாக வெடித்தது. உடனே ரஜினி ரசிகர்கள் அது எப்படி சொல்லலாம் என விஜய் படம் வரும்போது எல்லாம் நெகட்டிவ் விமர்சனங்கள் கொடுக்க தொடங்கினர்.
உடனே விஜய் ரசிகர்கள் ரஜினி படம் வரும்போது அது ஓடக்கூடாது என சில வேலைகள் பார்க்கின்றனர். இப்படி மாறி மாறி இரு தரப்பு ரசிகர்களுக்கும் இடையே வாய்க்கா தகராறு ஓடிக்கொண்டிருக்கிறது.
அதேபோல் ஆடியோ விழாக்களில் இரு நடிகர்களும் பேசும்போது ஏதாவது ஒரு விஷயத்தை சொல்லி விடுகின்றனர். அதை இந்த சண்டையோடு ஒப்பிட்டு பார்த்து சோசியல் மீடியாவே ரணகளமாக மாறுகிறது.
வெளிவராத ரகசியம்
உதாரணத்திற்கு காக்கா கழுகு கதை நினைவு இருக்கலாம். இது கூலி ட்ரைலர் வரை எதிரொலித்தது என்பதை மறுக்க இயலாது இதையெல்லாம். இதை பார்த்து நமக்கு தோன்றும் ஒரே கேள்வி அப்படி விஜய்க்கும் ரஜினிக்கும் என்னதான்பா பிரச்சனை.
எதுக்காக இவ்வளவு அலப்பறை என கேட்க தோன்றுகிறது. ஆனால் உண்மையில் இருவருக்கும் இடையே எந்த பிரச்சனையும் கிடையாது. சொல்லப்போனால் ரஜினி விஜயின் நகர்வுகளை சந்தோஷமாகத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறார்.
எப்படி என்றால் சூப்பர் ஸ்டார் அரசியலுக்கு வரவேண்டும் என்று ரசிகர்கள் ஆசைப்பட்டனர். அதற்கு அவரும் சம்மதித்தார். ஆனால் அவரால் அதை செயல்படுத்த முடியவில்லை.
இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கிறது. அவர் அரசியலுக்கு வருவதை தடுக்க சில பல வேலைகளும் நடந்தது. அவரும் சில காரணங்களுக்காக அரசியலுக்கு வருவதை தவிர்த்து விட்டார்.
ஆனால் விஜய் அப்படி கிடையாது. முடிவு எடுத்ததோடு மட்டுமல்லாமல் அதற்காக பல பயிற்சிகள் எடுத்துக் கொண்டு இப்போது களம் இறங்கி மக்கள் செல்வாக்கு பெற்ற அரசியல்வாதியாகவும் மாறிவிட்டார்.
இதெல்லாம் பார்த்து சூப்பர் ஸ்டாருக்கு சந்தோஷம் தான். அதே சமயம் விஜய் தன்னுடைய முயற்சியில் வெற்றி பெற வேண்டும் என்ற கவலையும் அவருக்கு இருக்கிறது.
அதனாலேயே விஜய்க்கும் தனக்கும் நெருக்கமாக இருக்கும் ஒரு தயாரிப்பாளர் இயக்குனர் ஆகியோரிடம் இது பற்றி பேசி இருக்கிறார். அதேபோல் கவனமாக ஒரு ஒரு விஷயத்தையும் செய்ய வேண்டும் என சொல்லுங்கள் நான் சொன்னதாக சொல்லுங்கள் என்று கூட கூறியிருக்கிறாராம்.
இப்படி ஒரு விஷயம் யாருக்கும் தெரியாமலேயே இருக்கிறது. ஆனால் தற்போது அது வெளிவந்துள்ள நிலையில் ஆச்சரியமாக இருக்கிறது.