Suriya: சமீபத்தில் அகரம் பவுண்டேஷன் 15 வது வருட விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. சூர்யாவின் முயற்சியில் இப்போது அவருடைய குடும்பமே சேர்ந்து எல்லோருக்கும் கல்வி என்ற பயணத்தில் இருக்கின்றனர்.
இவர்கள் மூலம் ஏராளமான பின் தங்கிய குடும்ப சூழலில் இருந்து வந்த மாணவர்கள் டாக்டர் இன்ஜினியர் என்ற பெரிய பெரிய பதவியில் இருக்கின்றனர். அவர்களையெல்லாம் வரவழைத்து இந்த விழா நடந்தது.
அது மட்டும் இன்றி அரசாங்கம் செய்யாததை ஒரு தனி குடும்பம் செய்வது இப்போது எல்லோராலும் பாராட்டப்பட்டு வருகிறது. சூர்யா திரையில் மட்டுமல்ல நிஜத்திலும் ஒரு ஹீரோ தான் என்பதை நிரூபித்து விட்டார்.
சூர்யா மீது தீராத வன்மம்
ஆனால் இதெல்லாம் அவர் சுயலாபத்திற்காக செய்கிறார். இவ்வளவு வருடங்கள் சத்தம் இல்லாமல் நடந்த விழா இப்போது பிரம்மாண்டமாக நடத்தப்படுவதற்கு பின் அரசியல் இருக்கிறது என சிலர் தங்கள் வன்மத்தை கொட்டி வருகின்றனர்.
அதேபோல் அவருடைய படங்கள் தொடர்ந்து தோல்வி அடைகிறது. இப்படி எல்லாம் செய்து பழைய கோபத்தை எல்லாம் தீர்க்க பார்க்கிறார் என வேறு சில நடிகர்களின் ரசிகர்கள் வெளிப்படையாக சோசியல் மீடியாவில் கூறி வருகின்றனர்.
உண்மையில் எந்த ஹீரோவும் செய்யாததை சூர்யா செய்கிறார். அந்த கடுப்பில் தான் சம்பந்தப்பட்ட நடிகர்களின் ரசிகர்கள் இப்படி எல்லாம் செய்து வருகின்றனர். ஏனென்றால் சூர்யாவின் இந்த செயலுக்கு முன் எந்த ஹீரோவாலும் நிற்க முடியாது.
கோடிகளில் பணத்தை வாங்கிக் கொண்டு செல்லும் ஹீரோக்களுக்கு முன் சூர்யா அதை கல்விக்காக கொடுப்பது மிகப்பெரிய விஷயம். யார் யாரையோ இளைய காமராஜர் என்று சொல்கிறார்கள். அந்த பட்டம் சூர்யாவுக்குத்தான் பொருந்தும் என அவரின் ரசிகர்கள் பெருமையோடு கூறி வருகின்றனர்.