Ajith : அஜித்துக்கு விடாமுயற்சி படம் கைவிட்டாலும் குட் பேட் அக்லி படம் நல்ல வரவேற்பை பெற்றது. அஜித் ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாடி தீர்த்தனர். அதேபோல் சூர்யாவுக்கும் கங்குவா படம் மிக மோசமான தோல்வியை கொடுத்தது. போட்ட பட்ஜெட்டை கூட எடுக்க முடியாமல் திணறியது.
ஆனால் அதன் பின்பு வெளியான ரெட்ரோ படம் ஒரு நல்ல வெற்றியை கொடுத்தது. மிகப்பெரிய லாபம் கிடைக்கவில்லை என்றாலும் சராசரியான லாபத்தை கொடுத்தது. இந்த சூழலில் ரெட்ரோ மற்றும் குட் பேட் அக்லி ஆகிய படங்கள் இன்னும் சாட்டிலைட் உரிமைக்கு விற்கப்படவில்லை.
அதுவும் அஜித்தின் விடாமுயற்சி படத்தை சன் டிவி கைப்பற்றி இருந்தது. தமிழக புத்தாண்டான ஏப்ரல் 14ஆம் தேதி இந்த படம் ஒளிபரப்பு செய்யப்பட்டது. ஆனால் டிஆர்பியில் மந்தமடைந்தது. இதைத்தொடர்ந்து குட் பேட் அக்லி படத்தையும் சன் டிவி தான் சாட்டிலைட் உரிமையை வாங்கியது.
விற்பனை ஆகாத ரெட்ரோ மற்றும் குட் பேட் அக்லி
ஆனால் படம் வெளியான பிறகு ரத்து செய்துவிட்டதாம். ரெட்ரோ படமும் வெளியாகி இரண்டு மாதம் ஆன நிலையில் தற்போது வரை சாட்டிலைட் உரிமை விற்கப்படவில்லை. பெரிய நட்சத்திரங்களாக இருக்கும் அஜித், சூர்யா படங்களுக்கே இப்படி ஒரு நிலைமையா என்பது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.
இதன் மூலம் ஒரு நல்ல தொகையை கைப்பற்றலாம் என்று நினைத்த தயாரிப்பாளர்களுக்கு பெரிய ஏமாற்றத்தைக் கொடுத்திருக்கிறது. மேலும் சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு நன்றாக ஓடிய படங்கள் சாட்டிலைட் உரிமைக்கு விற்கப்பட்டு விட்டது.
ரெட்ரோ மற்றும் குட் பேட் அக்லி படங்கள் தற்போது வரை சாட்டிலைட் உரிமை பெறாதது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. மேலும் அஜித்தின் வீரம் படமும் டிஆர்பியில் அடி வாங்கியது குறிப்பிடத்தக்கது.