Vadivelu: வடிவேலு ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக இருந்து வந்தார். இவருக்காகவே அப்போது படங்கள் நிறைய நாட்கள் திரையரங்குகளில் ஓடியது. ஆனால் சில காலம் சினிமாவில் நடிக்க முடியாமல் வடிவேலுக்கு ரெட் கார்ட் தடை போடப்பட்டது. இப்போது ரீ என்ட்ரி கொடுத்து மீண்டும் படங்களில் நடித்து வருகிறார்.
இந்த சூழலில் வடிவேலுவின் உடன் பிறந்த தம்பி சமீபத்தில் 52 வயதான நிலையில் கல்லீரல் பிரச்சனை காரணமாக உயிரிழந்ததாக தகவல் வெளியானது. இது சினிமா பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை பேரதிர்ச்சியாக இருந்தது. அதோடு மட்டுமல்லாமல் வடிவேலுவின் தம்பி ஜெகதீசனை பார்க்கும்போது அச்சு அசலாக வடிவேலு சாயலிலே இருக்கிறார்.
மேலும் இவர் டி ராஜேந்திரன் இயக்கத்தில் வெளியான காதல் அழிவதில்லை படத்தில் சில காட்சிகளில் நடித்திருந்தார். அதன் பின்பு சினிமா வாய்ப்பை கிடைக்காத காரணத்தினால் ஜவுளிக்கடை நடத்தி வந்திருக்கிறார். இந்நிலையில் சினிமா விமர்சகர் மற்றும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் இதுகுறித்து சில விஷயங்களை பேசி உள்ளார்.
அதாவது வடிவேலு இப்போது கோடிகளில் சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிறார். அவருடைய படத்தில் டூப்பாக தனது தம்பியை நடிக்க வைத்தாலே அவர் நல்ல நிலைமையில் இருந்திருக்கலாம். அதோடு மட்டுமல்லாமல் கல்லீரல் சிகிச்சைக்கு இப்போது நவீன மருத்துவங்கள் நிறைய வந்து விட்டது. வடிவேலு சுகாதாரத் துறை அமைச்சரிடம் ஒரு வார்த்தை சொன்னாலே போதும்.
ஆனால் வடிவேலுவின் தம்பி எந்த மாதிரி குணாதிசயம் கொண்டவர் என்பது நமக்கு தெரியாது. இருந்த போதும் வடிவேலு தனது சொந்த வாழ்க்கையை மிகவும் ரகசியமாக வைத்துக் கொள்வார். தனது மகன் மற்றும் மகள் திருமணத்தை கூட பத்திரிக்கையாளர்களிடம் சொல்லாமல் ரகசியமாக மதுரையில் நடத்தி உள்ளார்.
கோடிக்கணக்கில் சொத்து வைத்திருக்கும் வடிவேலு கூட பிறந்த தம்பிக்கு உதவாதது வேதனை அளிக்கிறது. ஆனால் அவர் இறந்த போது மட்டும் கண்ணீர் சிந்திய புகைப்படத்தை பார்த்தேன் என்று அந்த பதிவில் பயில்வான் கூறியிருக்கிறார். இவர் சொன்னதற்கு ஏற்ப ரசிகர்களின் கருத்தும் இதுவாகத்தான் இருந்து வருகிறது.