தமிழ் சினிமாவின் காமெடி ஜாம்பவானாக வலம்வந்த வடிவேலு சமீபகாலமாக படவாய்ப்புகள் இல்லாமல் தவித்து வருகிறார். கிடைத்த சில படங்களிலும் பஞ்சாயத்து. இருந்தாலும் வடிவேலுவை மீண்டும் திரையில் பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக இருக்கின்றனர்.
கடந்த சில வருடங்களாகவே நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என வடிவேலு அடம் பிடித்ததால் தான் அவருக்கு படவாய்ப்புகள் இல்லை எனக் கூறுகின்றனர். ஆனால் இன்னொருபுறம் வடிவேலு சம்பள விஷயத்தில் கறாராக இருப்பதாகவும் செய்திகள் வந்தது.
மார்க்கெட் இல்லாத போதும் கோடிகளில் சம்பளம் கேட்டால் எப்படி கொடுப்பது என கோலிவுட் வட்டாரங்களில் ஒரு பக்கம் அவரைப்பற்றி கிசுகிசுக்கின்றனர். இப்படி பேச்சுக்கள் அதிகமாக இருந்த நிலையில்தான் சங்கர் இம்சை அரசன் 24ஆம் புலிகேசி என்ற படத்தில் வடிவேலுவை ஒப்பந்தம் செய்தார்.
பெரிய அளவில் ஆரம்பிக்கப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஆரம்பித்த சில நாட்களிலேயே கைவிடப்பட்டது. அதற்குக் காரணம் இயக்குனர் சிம்புதேவனிடம், அந்த காட்சியை மாற்று இந்த காட்சியை மாற்று என வடிவேலு தொந்தரவு செய்து தன்னுடைய தலையீடுகளை விட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதால் அவர் தற்போது தமிழ் சினிமாவில் நடிக்க முடியாதபடி ரெட் கார்டு கொடுக்கும் அளவுக்குச் சென்றது.
அதனைத் தொடர்ந்து வடிவேலு உடம்பில் நடிக்க தெம்பு இருந்தாலும் படவாய்ப்புகள் கொடுக்க ஆளில்லை என அடிக்கடி வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இதோடு கொரானா விழிப்புணர்வு வீடியோக்களையும் அடிக்கடி பதிவு செய்கிறார்.
அந்த வகையில் சமீபத்திய வீடியோ ஒன்றில், சும்மா இருப்பது எவ்வளவு கஷ்டம் என்று தெரியுமா என ஒரு காமெடி காட்சியில் நடித்திருப்பேன் எனவும், ஆனால் காமெடிக்கு செய்தது தற்போது உண்மையிலேயே நடக்கும் என கொஞ்சம்கூட எதிர்பார்க்கவில்லை என கூறி வருத்தப்பட்டுள்ளார். எவ்வளவு நாள் ஒரு மனுஷன் சும்மாவே இருப்பது எனவும் கண்கலங்கி உள்ளார்.
