மற்றவர் வளர்வதை விரும்பாத வடிவேல்.. வெளிப்படையாக சொன்ன காமெடி நடிகர்

வடிவேலு தமிழ் சினிமாவில் காமெடி கிங்காக வலம் வருகிறார். பல ஆண்டுகளாக மக்களை சந்தோஷத்தில் ஆழ்த்தி வரும் வடிவேலு தொடர்ந்து பல்வேறு விதமான கருத்துக்களை முன் வைத்து வருகிறார். பல வருடமாக நடிக்காமல் இருந்த வடிவேலுவிடம் பத்திரிக்கையாளர்கள் இத்தனை நாட்கள் நடிக்காமல் இருப்பதற்கு என்ன காரணம் என கேட்டனர்.

அதற்கு வடிவேலு தான் நடிக்காமல் போனதற்குக் பல காரணம் இருக்கிறது. ஆனால் என்னால் எந்த ஒரு காரணத்தையும் கூற முடியாது எனக் கூறினார். அதற்கு பலரும் வடிவேலுக்கு ஷங்கருடன் ஏற்பட்ட மோதல்களும் தயாரிப்பாளர் சங்கத்தின் ஏற்பட்ட சிக்கல்கள் தான் காரணம் என கூறி வந்தனர்.

சினிமாவில் கொடிகட்டி பறக்கும் வடிவேலு மீது பல்வேறு பிரபலங்களும் பல்வேறு விதமான குற்றச்சாட்டுகளை வைத்து வருகின்றனர். தற்போது லொள்ளு சபா மூலம் பிரபலமான சுவாமிநாதன் வடிவேலு பற்றி சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.

அதாவது வடிவேலு ராஜ்கிரன் வீட்டில் தான் வேலை பார்த்து வந்தார். அப்போது லொள்ளுசபா சாமிநாதன் ரசிகர்களிடம் பிரபலமான நடிகராக இருந்துள்ளார். அப்போது வடிவேலு சாமிநாதன் இடம் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தால் கூறுங்கள் என பலமுறை கூறியதாக பேட்டியில் தெரிவித்துள்ளார்.

மேலும் வடிவேல் சாமிநாதன் இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடித்துள்ளனர். அப்போது வடிவேலு சாமிநாதனிடம் இந்த காட்சி நன்றாக நடிக்கவில்லை மீண்டும் நடியுங்கள் என கூறியுள்ளார். அதன்பிறகு இவர் சரியாக நடிக்க, வடிவேலு அந்த காட்சியில் நடிக்க கொஞ்சம் தடுமாறி உள்ளார். இந்த மாதிரி இருவரும் மாறி மாறி நடிப்பில் சொதப்பி உள்ளனர். பின்பு சுவாமிநாதன் வடிவேலிடம் எந்த மாதிரி நடிக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்கள் அதை சொல்லிக் கொடுங்கள் நான் நடிக்கிறேன் என கூறியுள்ளார்.

ஆனால் இயக்குனர் இந்த ஷாட் ஓகே என கூறியுள்ளார். கடைசியாக உங்களுக்கு மட்டும்தான் குளோஸ் ஷாட் வைத்துள்ளேன் அவருக்கு இல்லை என கூறியவுடன் வடிவேலு சரி என கூறிவிட்டு சென்றுள்ளார்.

மேலும் அந்த காலகட்டத்தில் சீனியர் நடிகர்கள் யாரும் ஜூனியர் நடிகர்களை வளர்த்துவிட ஆசைப்பட மாட்டார்கள். எந்த ஒரு நடிகருக்கும் தன்னுடைய தனித்துவமான நடிப்பையும் கற்றுத் தர மாட்டார்கள் என கூறியுள்ளார். ஆனால் தற்போது இருக்கும் நடிகர்கள் அப்படி கிடையாது சக நடிகர்களுக்கு தெரியாதது கூட சொல்லித் தருவார்கள் என பெருமிதமாக கூறியுள்ளார்.