நகைச்சுவை மன்னன் வைகைப்புயல் வடிவேலு தன்னோடு இணைந்து நடித்த சிலரை சில காரணுங்களுக்காக ஒதுக்கி வருகிறார்.
தல-வடிவேலு
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் தல அஜித். ஆரம்ப காலத்தில் பல்வேறு அவமானங்களை சந்தித்து இருந்தவர் என்பது ரசிகர்கள் பலரும் அறிந்தது.

ஓரளவே தல வடிவேலுவுடன் இணைந்து “ராஜா” படத்தில் நடித்துக்கொண்டிருந்த சமயத்தில் வடிவேலுவுக்கும் தல அஜித்திற்கும் ஒரு கருத்து மோதல் எழுந்துள்ளது.
ஆக்ரோசமாக பேசிக்கொண்ட இருவரையும் படக்குழு சமாதானம் செய்தது. அதற்கு பிறகு இருவரும் எந்த படத்திலும் இணையவே இல்லை.
தனுஷ்-வடிவேலு
தமிழில் மாஸ் நடிகராய் வலம் வருபவர் நடிகர் தனுஷ். நடிப்பு பாடல் பாடகர் இயக்குனர் என் பன்முகத்தன்மை கொண்டவராக திகழ்ந்து வருகிறார்.
முதலில் தனுஷ் நடித்த படிக்காதவன் படத்தில் வைகப்புயல் வடிவேலு நடிப்பதாய் இருந்தது.
சில காரணங்களால் வடிவேலுவுக்கு பிறகு நடிகர் விவேக் ஒப்பந்தமானார். பிறகு வடிவேலு தனுஷோடு இணைவதற்கான வாய்ப்புகள இல்லாமலே போனது.