வடிவேலு பிரச்சினையை தீர்த்து வைத்த 2 பேர்.. ரெட் கார்டு தடை நீக்கத்துக்கு பின்னால் உள்ள பஞ்சாயத்து

இயக்குனர் சிம்பு தேவன் வடிவேலுவை வைத்து இயக்கிய படம் இம்சை அரசன் 23ஆம் புலிகேசி. 2006 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த படம் அதிரி பதிரி ஹிட் அடித்தது. வடிவேலு அடுத்தடுத்த படங்களில் ஹீரோவாக நடிப்பதற்கு ஒரு உத்வேகம் கொடுத்த முதல் படம் புலிகேசி.

அதன் பின்னர் திமிரு, எம்டன் மகன் போன்ற படங்களில் காமெடியனாகவும் நடித்த அசத்தினார். எலி, தெனாலிராமன் என ஹீரோவாகவும் ஒரு பக்கம் படங்களில் கலக்கி வந்தார். இப்பொழுதுதான் சிம்பு தேவன் மீண்டும் ஒரு படத்தை இயக்குவதற்காக வடிவேலுவை நாடியுள்ளார்.

ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் புலிகேசி படம் நல்ல வரவேற்பு பெற்றது. இதனால் இந்த படத்தை தயாரிப்பதற்கு சங்கர் முன் வந்தார். ஆனால் அவர் லைக்காவிடமிருந்து பணம் வாங்கிக் கொண்டு பஸ்ட் காப்பி அடிப்படையில் மட்டும் எடுத்து கொடுப்பதாக ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

இதற்காக சங்கர் தரப்பிலிருந்து வடிவேலுவிற்கு 4 கோடி அட்வான்ஸாக கொடுக்கப்பட்டுள்ளது. அதை வாங்கிக் கொண்ட வடிவேலு சூட்டிங் வராமல் இழுத்து அடித்தார். அவருடைய மேக்கப் மேன் தான் வேணும் என அடம்பிடித்து இந்த படத்திற்கு பல இடையூறுகள் விளைவித்தார்.

இந்த படத்திற்காக 4 கோடி ரூபாய் செட் அமைத்தும் வீணானது. இதனால் சங்கர் தயாரிப்பு கவுன்சிலிடம் புகார் கொடுத்தார். அதனால் தான் வடிவேலுக்கு ரெட் கார்டு போடப்பட்டது. 2017ஆம் ஆண்டிலிருந்து வடிவேலு 5 வருடங்கள் நடிக்கவில்லை. அதன் பின்னர் வடிவேலு உதயநிதி மற்றும் லைக்காவிடம் சென்று பேச்சுவார்த்தை நடத்தி வேறு படம் நடித்து தருவதாக சொல்லி இந்த பஞ்சாயத்தை தீர்த்து வைத்தார்.