கையில ஒரு வெயிட்டான வெப்பன் இருக்கு.. சுந்தர் சி-யின் ராஜதந்திரத்தை உளறிய வடிவேலு

Sundar C- Vadivelu: சுந்தர் சி, வடிவேலு கூட்டணி என்றாலே ரகளைக்கு பஞ்சம் இருக்காது. அதிலும் வின்னர் படத்தில் இவர்களின் காமெடி வேற லெவலில் வொர்க் அவுட் ஆகி இருந்தது.

அதையடுத்து பல படங்களில் இவர்கள் இணைந்திருக்கின்றனர். தற்போது சிறு இடைவெளிக்கு பின் மீண்டும் இந்தக் கூட்டணி கேங்கர்ஸ் மூலம் சேர்ந்துள்ளது.

கையில ஒரு வெயிட்டான வெப்பன் இருக்கு

சுந்தர் சி இயக்கியுள்ள இப்படம் ஏப்ரல் 24 திரைக்கு வருகிறது. காமெடிக்கு பஞ்சம் இல்லாமல் அலப்பறையாக படம் இருக்கும் என்பது ட்ரெய்லரிலேயே தெரிந்தது.

அதையடுத்து படத்தின் பிரமோஷன் பணிகள் சூடு பிடித்துள்ளது. தற்போது சுந்தர் சி மற்றும் வடிவேலு இருவரும் ஒரு சேனலுக்கு பேட்டி கொடுத்தனர்.

அதில் இயக்குனரின் ராஜதந்திரத்தை வைகைப்புயல் போட்டு உடைத்துள்ளார். அதாவது எந்த கதையும் வொர்க் அவுட் ஆகலன்னா கைவசம் எனக்கு ஒரு வெப்பன் இருக்கு.

அதுதான் அரண்மனை சீரிஸ். நாலு பாகம் வந்துருச்சு. இப்ப கையில பாகம் ஐந்து இருக்கு. இப்படியே 10 பார்ட் வரைக்கும் வச்சிருக்கேன் என சுந்தர்.சி வடிவேலுவிடம் சொன்னாராம்.

இதை அந்த பேட்டியில் சொன்ன வடிவேலு அதனால் இவர பத்தி கவலை இல்லை. அரண்மனை போதும் என ஜாலியாக சொன்னார்.

ஏற்கனவே துவண்டு கிடந்த தமிழ் சினிமாவை அரண்மனை 4 தான் மீட்டெடுத்தது. அதேபோல் சுந்தர் சி-க்கும் இந்த சீரிஸ் தான் முழு நம்பிக்கை என்பது இப்போது தெரிய வந்துள்ளது.