10 வருட பகையை மறந்து நடிக்க ஒப்புக்கொண்ட பிரபலம்.. வடிவேலு சம்மதிப்பாரா.?

தமிழில் காமெடி கிங்காக வலம் வந்தவர் தான் நடிகர் வடிவேலு. இவர் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். அதிலும் இவர் நடித்துள்ள அனைத்து படங்களிலும் காமெடி நடிகர் சிங்கமுத்துவும் உடனிருப்பார். பெரும்பாலும் வடிவேலு இருந்தால் அந்த படத்தில் சிறு கதாபாத்திரத்திலாவது சிங்கமுத்து தலைகாட்டி இருப்பார்.

அதுமட்டுமின்றி இவர்கள் இருவரின் காம்போ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதனால் ரசிகர்களும் தொடர்ந்து இவர்களின் காமெடியை எதிர்பார்த்தனர். ஆனால் கடந்த 2007ஆம் ஆண்டு இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட நில மோசடி தகராறு காரணமாக இருவரது நட்பிலும் விரிசல் ஏற்பட்டது.

அந்த பிரச்சனைக்கு பின்னர் வடிவேலு மீண்டும் சிங்கமுத்துவுடன் இணைந்து நடிக்கவோ அவரை பார்க்கவோ விரும்பவில்லை. பொது நிகழ்ச்சிகளில் அவரை சந்திப்பதையும் வடிவேலு தவிர்த்து வந்தார். பலர் இவர்கள் இருவருக்கும் இடையே இருக்கும் பிரச்சனையை தீர்த்து வைக்க முயற்சி செய்தனர். ஆனால் பலன் கிடைக்கவில்லை.

தற்போது பிரபல இயக்குனர் ஒருவர் வடிவேலு மற்றும் சிங்கமுத்து ஆகிய இருவரையும் சேர்த்து வைக்க முயற்சி செய்து வருகிறாராம். அதன்படி தற்போது வடிவேலு மீண்டும் நடிக்க தொடங்கி விட்டார். சிங்கமுத்துவும் தற்போது ஸ்கிரிப்ட் தயார் செய்து வருகிறாராம்.

மேலும் வடிவேலு உடன் இணைந்து நடிக்கவும் சம்மதம் தெரிவித்து விட்டாராம். ஆனால் வடிவேலு சம்மதிப்பாரா என்று தெரியவில்லையாம். ஏனெனில் இந்த பிரச்சனையில் யார் மீது தவறு என்று தெரியவில்லை. இருப்பினும் வடிவேலு சிங்கமுத்து தான் என்னை ஏமாற்றி விட்டார் என வடிவேலு கூறி வருகிறாராம்.

மேலும் அவர் பயங்கர ஈகோ பார்ப்பாராம். எனவே இவர்கள் ஒன்னு சேருவது சாத்தியமாகுமா என தெரியவில்லை. சேர்ந்து ஒரு படத்தில் நடித்தால் கண்டிப்பாக ரசிகர்களின் எதிர்பார்ப்பு பூர்த்தி செய்யப்படும் என்பதில் எந்த ஒரு ஐயமும் இல்லை.