43 வருடங்களாக சினிமாவில் வடிவேலு சம்பாதித்தது இத்தனை கோடியா.. வாயை பிளக்கும் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் காமெடி மன்னனாக வலம் வருபவர் வடிவேலு. இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்துமே இவரது காமெடி கதாபாத்திரம் பெரிய அளவு ரசிகர்களை ஈர்த்தது. எப்படி ஒரு படம் வெற்றி அடைவதற்கு ஒரு நடிகர் காரணமாக இருப்பார் அதேபோல வடிவேலுவும் அப்படங்கள் வெற்றி அடைவதற்கு காரணமாக இருந்தார்.

அதுமட்டுமில்லாமல் வடிவேலு செய்யும் ஒவ்வொரு சேட்டைகளும், முகபாவனைகளும் ரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்ததால் பெருவாரியான இயக்குனர்களும் தங்களது படத்தில் எப்படியாவது வடிவேல் நடிக்க வைத்து விட வேண்டும் என தொடர்ந்து அனைத்து இயக்குனர்களும் வடிவேலுவுடன் பணியாற்ற ஆரம்பித்தனர்.

ஆனால் சமீப காலமாக வடிவேலு எந்த ஒரு படத்திலும் நடிக்க முடியவில்லை. அதற்கு காரணம் தமிழ் திரையுலகம் வடிவேலுவிற்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டு எந்த இயக்குனரும் இவருடன் பணியாற்றக் கூடாது என நிபந்தனையை வெளியிட்டுள்ளது. அதற்கு காரணம் சங்கர்தான் அதாவது 24ம் புலிகேசி படத்தில் முதலில் நடிக்க ஒப்புக் கொண்ட வடிவேல் அதன் பிறகு இருவருக்கும் மனஸ்தாபம் ஏற்பட நடிக்க மாட்டேன் என வடிவேலு கூறிவிட்டார்.

vadivelu-cinemapettai
vadivelu-cinemapettai

இதனால் கோபம் அடைந்த சங்கர் தயாரிப்பாளர் சங்கத்திடம் வடிவேலுவால் பல கோடி நஷ்டம் ஏற்பட்டதாக கூறி அவருக்கு ரெட் கார்டு வழங்க வைத்து விட்டார். அதனால்தான் வடிவேலு தற்போது பெரிய அளவில் தமிழ் சினிமாவில் படங்கள் நடிக்க முடியாமல் தவித்து வருகிறார்.

ஆனால் இவரது ரசிகர்கள் அவர் படங்கள் நடிக்க வேண்டும் என்று அவசியமே இல்லை இவர் நடித்த ஏகப்பட்ட படங்களில் தற்போது வரை ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளன எனவும் மேலும் வடிவேலுவின் சொத்து மதிப்பு தற்போது 150 கோடிக்கு மேல் இருக்கும் என சினிமா வட்டாரத்தில் கூறிவருகின்றனர். இதனை வைத்துப் பார்க்கும் போது இனிமேல் வடிவேலு படம் நடித்தாலும் நடிக்காவிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை என்பது தெரிகிறது.