சொகுசு கார், பிரம்மாண்ட பங்களா.. 63வது பிறந்தநாளில் வடிவேலுவின் வாயை பிளக்க வைக்கும் சொத்து மதிப்பு

Actor Vadivelu: குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் ரசிக்கப்படும் வடிவேலு இன்று தன்னுடைய 63 வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த மாமன்னன் இவரை நகைச்சுவை நடிகர் என்பதையும் தாண்டி வேறொரு பரிமாணத்தில் காட்டியது.

ஆனாலும் ரசிகர்களை மகிழ்விப்பது தான் என்னுடைய வேலை என்பது போல் அவர் காமெடி கேரக்டருக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். அதன்படி அவர் காமெடியில் கலக்கி இருக்கும் சந்திரமுகி 2 இந்த மாத இறுதியில் வெளிவர இருக்கிறது.

Also read: 52 வயதில் உடன்பிறந்த தம்பி மரணம்.. கோடிக்கணக்கில் சொத்து இருந்தும் உதவாத வடிவேலு

இந்நிலையில் வைகைப் புயலின் சொத்து மதிப்பு பற்றிய விவரம் தற்போது வெளியாகி பலரையும் வாய் பிளக்க வைத்திருக்கிறது. ஆரம்பத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களில் கஷ்டப்பட்டு நடித்து வந்த வடிவேலு ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அசைக்க முடியாத ஜாம்பவானாக உருவெடுத்தார்.

அப்போதே லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கி வந்த இவர் தற்போது ஒரு படத்திற்கு 4 முதல் 5 கோடி வரை சம்பளமாக பெற்று வருகிறார். அது மட்டுமல்லாமல் இவருக்கு சென்னையில் மட்டுமே இரண்டு சொகுசு பங்களா இருக்கிறது. ஒவ்வொரு வீட்டின் மதிப்பு மட்டுமே 2 கோடியை தாண்டும் என்கிறார்கள்.

Also read: காமெடியனுக்கெல்லாம் அவ்வளவு கொடுக்க முடியாது.. மாமன்னனாகவே நினைத்து வடிவேலு கேட்கும் சம்பளம்

மேலும் அவரிடம் ரக ரகமான ஆடம்பர கார்களும் இருக்கிறது. அந்த வரிசையில் இரண்டு ஆடி கார், பிஎம்டபிள்யூ, டொயோட்டா என பல விலை உயர்ந்த கார்களை வடிவேலு வைத்திருக்கிறார் அது மட்டுமின்றி மதுரையில் இவருக்கு 20 ஏக்கர் நிலமும் இருக்கிறது.

இப்படி சினிமாவில் சம்பாதித்ததை சரியாக முதலீடு செய்து வைத்திருக்கும் வடிவேலுவின் மொத்த சொத்து மதிப்பு மட்டுமே 130 கோடி ஆகும். இடையில் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த இவர் தற்போது மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்து அசத்தி வருகிறார். அந்த வகையில் மீம்ஸ் கிரியேட்டர்களின் நாயகனாக இருக்கும் இந்த மாமன்னனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Also read: மாமன்னன் வெற்றியால் வடிவேலு போட்ட மாஸ்டர் பிளான்.. ஒரு படத்திற்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா?