அஜித் நடிப்பில் வினோத் இயக்கத்தில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை. நேர்கொண்ட பார்வை படத்தை தயாரித்த போனிகபூர் இந்த படத்தை தயாரித்து வருகிறார். மேலும் யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார்.
வலிமை படத்தில் அஜித்துக்கு வில்லனாக பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடித்து வருகிறார். மேலும் அஜித்துக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை ஹீமா குரேஷி நடிக்கிறார்.
ஹீமா குரேஷி ஏற்கனவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான காலா படத்தில் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த சில நாட்களாகவே அஜித் ரசிகர்கள் வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடுமாறு படத்தின் தயாரிப்பாளர் போனி கபூரிடம் தொடர்ந்து சமூக வலைதளங்களில் நச்சரித்து வருகின்றனர்.
இது அஜித்துக்கு பிடிக்கவில்லை என்றாலும் ஒன்றும் சொல்ல முடியாத நிலைமை. அதுவும் விஜய்யின் பீஸ்ட் பட பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான பிறகு அஜித் ரசிகர்களின் அட்டகாசம் சமூக வலைதளங்களில் அளவுக்கு அதிகமாகி விட்டது.
இதனைப் புரிந்துகொண்ட வலிமை படத்தின் நாயகி ஹீமா குரேஷி தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் கோர்ட் அணிந்து உள்ளே எதுவும் அணியாமல் வெளியிட்டுள்ள புகைப்படம் அஜித் ரசிகர்களை அப்படியே ஆப் செய்து விட்டது. அப்பப்போ இப்படி காட்டி எங்களை கொஞ்சம் கூல் பண்ணுங்க மேடம் என கமெண்ட்டுகளை அள்ளி தெளித்து வருகின்றனர்.
