தல அஜித் நடிப்பில் 2019ஆம் ஆண்டு விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை ஆகிய இரண்டு படங்கள் வெளியாகி தல ரசிகர்களை குஷிபடுத்தியது. ஆனால் அதற்கு பிறகு தொடங்கப்பட்ட வலிமையை திரைப்படம் தற்போது வரை படப்பிடிப்பு முடிக்க முடியாமல் தடுமாறி வருகிறது.
2019 ஆம் ஆண்டின் இறுதியில் ஆரம்பிக்கப்பட்ட படம் தான் வலிமை. இரண்டாவது முறையாக அஜித் மற்றும் வினோத் கூட்டணி இணைந்தது. மேலும் போனி கபூரும் இரண்டாவது முறையாக தல அஜித் படத்தை தயாரித்தார்.
அஜித்தின் சினிமா கேரியரில் வலிமை படம் தான் மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாராகி வருவதாக கூறினர். மேலும் இந்த படத்தில் தல அஜித் ஈஸ்வரமூர்த்தி ஐபிஎஸ் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது ஏற்கனவே வெளிவந்த தகவல் தான்.

ஆனால் கடந்த இரண்டு வருடங்களாக வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கூட விடாமல் இருந்தது கொஞ்சம் தல ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. பலமுறை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட வேண்டாமென தல அஜித்தே கூறியதாக செய்திகள் வந்தன.
இந்நிலையில் ஒரு வழியாக அஜித்தை சமாதானப்படுத்தி வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் தேதியை கிட்டத்தட்ட உறுதி செய்து விட்டதாம் படக்குழு. வருகின்ற ஜூலை 15ஆம் தேதி வலிமை பஸ்ட் லுக் வெளியாக அதிக வாய்ப்பு இருக்கிறது என்கிறது சினிமா வட்டாரம்.
இதனால் தல ரசிகர்கள் சமூக வலைதளங்களில் இதற்கு முன்னர் வரை எந்தெந்த போஸ்டர் எவ்வளவு சாதனைகள் செய்திருக்கிறது என்பதை கணக்கிட ஆரம்பித்துவிட்டனர். கேட்டால் திருப்பிக் கொடுக்கணுமல்ல எனக் கூறுகின்றனர். எது எப்படியோ, ஒருவழியாக அஜித் படத்திற்கு விடிவுகாலம் கிடைத்துவிட்டது. பண்டிகையை கொண்டாட வேண்டியது தானே!