வலிமை படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா.? அடேங்கப்பா! பல கோடிகளை தெறிக்க விட்டதே!

கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்குப் பிறகு அஜித்தின் படம் பிப்ரவரி 24 தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனால் அவரது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடித்துள்ள படம் வலிமை.

பல்வேறு காரணங்களால் வலிமை ரிலீஸ் தேதி ஒவ்வொருமுறையும் தள்ளிப்போனது. தற்போது திரையரங்குகளில் 100 சதவீத அனுமதி அளித்த பின்பு பிப்ரவரி 24ஆம் தேதி வலிமை படத்தை ரிலீஸ் செய்ய உள்ளதாக போனிகபூர் அறிவித்தார்.

வலிமை படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் பான் இந்திய படமாக வெளியாக உள்ளது. இதனால் இப்படத்தின் ரிலீசை முன்னிட்டு புரோமோஷன் வேலைகள் தீவிரமாக நடந்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் அஜீத் நீண்ட இடைவெளிக்குப் பிறகு வலிமை படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.

வலிமை படத்தின் முன்பதிவு தொடங்கப்பட்ட நிலையில் பல்வேறு திரையரங்குகளில் ஹவுஸ் ஃபுல்லாக உள்ளது. இப்படத்தின் அப்டேட்டை தினமும் போனிகபூர் வெளியிட்டு வருகிறார். இதனால் வலிமை படத்தின் டீசர், ப்ரோமோ, வீடியோ என அனைத்தும் ட்ரெண்டாகி வருகிறது.

வலிமை படம் தமிழகத்தில் மட்டும் 1000க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் திரையிடப்பட உள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் கிட்டத்தட்ட 32 கோடி வரை வசூல் செய்யும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் மட்டுமல்லாது சவுதியில் வலிமை படத்திற்கு நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

தமிழகத்தில் மட்டுமே ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வலிமை படம் வெளியாக உள்ள நிலையில் மற்ற மாநிலங்களிலும் பல்வேறு திரையரங்குகளில் வலிமை படம் வெளியாக உள்ளதால் முதல் நாளிலேயே வலிமை படம் வசூல் சாதனை படைக்க உள்ளது.