விஜய் செய்வதை பார்த்து அஜித்துக்கு வந்த ஆசை.. மாஸ்டர் பிளான் போட்ட போனிகபூர்!

இயக்குனர் வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடித்து வரும் படம் வலிமை. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக படத்திற்கான அப்டேட் கேட்டு ரசிகர்கள் காத்திருந்த நிலையில், சமீபத்தில் வலிமை ஃபர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை திக்குமுக்காட செய்தது.

அதுமட்டுமின்றி இதுவரை இல்லாத அளவிற்கு வலிமை படத்தின் மோஷன் போஸ்டர் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் வெளியான அப்டேட்டுகளால் அஜித் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

சோசியல் மீடியாவில் வலிமை படத்தை ட்ரெண்டாக்கி வருகிறார்கள். இந்த படத்திற்கு இன்னும் 10 நாட்கள் படப்பிடிப்பு மட்டுமே மீதமுள்ளது. இதற்காக தற்போது படக்குழுவினர் ஹைதராபாத் சென்றுள்ளனர்.

படப்பிடிப்பு மற்றும் இதர பணிகளை முடித்து விட்டு தீபாவளிப் பண்டிகைக்கு படத்தை வெளியிட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுமட்டுமின்றி வலிமை படத்தின் ஹிந்தி டப்பிங் பணிகளும் தற்போது நடைபெற்று வருகிறதாம்.

தமிழில் வெளியாகும் அன்றே ஹிந்தியிலும் வெளியாக உள்ளதாக சொல்லப்படுகிறது. இதன்மூலம் ரீமேக் அல்லாமல் முதன் முறையாக நேரடி டப்பிங் மூலம் ஹிந்தியில் வலிமை படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

விஜய்யின் மாஸ்டர் படம் ஹிந்தியில் எதிர்பார்த்த வரவேற்பு பெறவில்லை. ஆனாலும் வாத்தி கம்மிங் பாடலை வைத்து  ஓரளவு சமாளித்து விட்டனர். தற்போது இதை போல் அஜித்தின் வலிமை படமும் ஹிந்தியில் வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

valimai-cinemapettai
valimai-cinemapettai