அஜித் ரசிகர்களுக்கு ஆறுதலாக அப்டேட் வெளியிட்ட படக்குழு.. ட்விட்டரை ஆக்கிரமித்த தல ரசிகர்கள்!

அமராவதி முதல் அசல் வரை, நேசம் முதல் நேர்கொண்ட பார்வை வரை , வில்லன் முதல் விஸ்வாசம் வரை என வரிசை கட்டி வகை பிரிக்கும் அளவிற்கு தன் நடிப்பை வெளி கொண்டவர் தல அஜித்.

தொடர்ந்த சிறுத்தை சிவா இயக்கத்தில் வெற்றிப்படங்களை கொடுத்து வந்த தல இப்போது வினோத் இயக்கத்தில் அடுத்தடுத்து நடித்து வருகிறார். வலிமை படத்தின் “பர்ஸ்ட் லுக்” மற்றும் “டீசர்” அதிவிரைவில் வெளியிட வேண்டும் என ரசிகர்கள் பிடிவாதமாக இருந்து வந்தனர்.

இந்த படத்தின் முக்கிய காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டு விட்டது என்றும், இன்னும் சண்டை காட்சிகள் மற்றும் இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கும் என்றும் கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கின்றது.

கடந்த ஒரு வருடமாக எதிர்பார்த்த வலிமை படத்தின் அப்டேட் தற்போது கிடைத்துள்ளது. அடுத்த மாதத்தில் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதியுடன் வெளிவரும் என்று போனிகபூர் வட்டாரம் தெரிவித்துள்ளனர்.

இதைக் கேட்டு அஜீத் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். தளபதியின் அடுத்தடுத்த படங்களின் அப்டேட் வந்த வண்ணம் உள்ளது. இதனால் விரக்தியில் இருந்த அஜித் ரசிகர்களுக்கு சற்று ஆறுதலை கொடுத்துள்ளதாம்.

ajith-valimai
ajith-valimai