தற்போது ராஜமௌலி என்ன முடிவு எடுக்கிறாரோ அதை பொருத்துதான் வலிமையின் தலையெழுத்து அமையும் என்கிறது சினிமா வட்டாரம். அப்படி என்னதான் ஆச்சு என்பதை பற்றி பார்ப்போம்.
தல அஜித் நடிப்பில் வினோத் இயக்கத்தில் கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக உருவாகி வரும் திரைப்படம் வலிமை. சமீபத்தில் வலிமை படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி வைரல் ஆனது.
அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து வலிமை படத்தின் இறுதி கட்ட வேலைகளை முடித்துவிட்டு விரைவில் படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளது படக்குழு. அந்த வகையில் முதலில் தீபாவளியை குறி வைத்தது வலிமை படம்.
ஆனால் அதே தேதியில் ரஜினியின் அண்ணாத்த படம் வருவதால் அதற்கு வழி கொடுக்கும் வகையில் ஒரு மாதம் முன்னதாகவே அக்டோபர் மாதத்தில் வலிமை படத்தை வெளியிட வேலைகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறதாம்.

ஆனால் அதே மாதத்தில் தான் ராஜமௌலி கிட்டத்தட்ட 400 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக இயக்கி வரும் ரத்தம் ரணம் ரௌத்திரம்(RRR) என்ற படம் வெளியாக உள்ளது. ராஜமௌலி படம் என்பதால் தமிழ்நாட்டிலும் அந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது.
அப்படி ஒருவேளை அந்த படம் ரிலீஸ் செய்யப்பட்டால் வலிமை படத்திற்கு தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் என கூறுகின்றனர். ஆனால் உண்மை நிலவரங்களை பொறுத்தவரை வலிமை படம் அக்டோபர் மாதம் வருவதற்கு தான் அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும், ராஜமவுலி படம் அடுத்த வருடத்திற்கு செல்ல உள்ளதாகவும் கூறுகின்றனர். எது எப்படியோ, ராஜமௌலி சொல்வதை பொறுத்துதான் வலிமையின் தலையெழுத்து இருக்கும் என்கிறது சினிமா வட்டாரம்.
