தல அஜித் மற்றும் வினோத் கூட்டணியில் இரண்டாவது முறையாக மிகவும் பிரமாண்ட பட்ஜெட்டில் தயாராகி வரும் திரைப்படம் வலிமை. இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்புகள் விரைவில் ஸ்பெயின் நாட்டில் தொடங்க உள்ளன.
முன்னதாக வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் கிட்டத்தட்ட படம் தொடங்கி இரண்டு வருடங்கள் கழித்து கடந்த வாரம் வெளியாகி அஜித் ரசிகர்களை மகிழ்வித்தது. ஆனால் மற்ற ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
அதனைத் தொடர்ந்து மோஷன் போஸ்டரில் இடம்பெற்ற யுவன் சங்கர் ராஜாவின் தீம் மியூசிக்கும் ஏற்கனவே அவர் பணியாற்றிய படத்திலிருந்து உருவப்பட்டது தான் என்ற செய்தி அஜித் ரசிகர்களை கொஞ்சம் கவலையில் ஆழ்த்தியது.
மிகப் பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த படத்திற்கு ஆரம்பத்திலேயே சின்ன சின்ன விமர்சனங்கள் வந்துள்ளது படக்குழுவினரை கொஞ்சம் அப்செட்டில் வைத்துள்ளது. இருந்தாலும் அடுத்தடுத்து அப்டேட்டை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்த படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.
அந்த வகையில் அடுத்ததாக வலிமை படத்தின் டீசர் எப்போது என்ற முடிவையும் எடுத்துவிட்டதாம் படக்குழு. ஆகஸ்ட் 15ஆம் தேதி வலிமை படத்தின் டீசர் வெளியாக அதிக வாய்ப்பு இருக்கிறது என்கிறது சினிமா வட்டாரம்.
ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் எதிர்பார்த்த அளவு விஜய் படத்தின் சாதனைகளை முறியடிக்க முடியவில்லை என்ற வருத்தம் தல ரசிகர்களுக்கு இருந்தது. அதை இந்த முறை சரியாகச் செய்துவிடவேண்டும் என்ற உத்வேகத்தில் இருக்கின்றனர்.
