சின்னத்திரை சீரியல்களின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்த வாணி போஜன் தற்போது வெள்ளி திரையில் ஹீரோயினாக கலக்கிக் கொண்டிருக்கிறார். முன்னணி நடிகைகளையே ஓரம் கட்டும் அளவுக்கு அவரின் கைவசம் ஏராளமான திரைப்படங்கள் இருக்கிறது.
அதில் சில திரைப்படங்கள் வெளிவராமல் இருந்தாலும் இவரை தங்கள் படங்களில் புக் செய்வதற்கு பல தயாரிப்பாளர்களும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால் சமீபகாலமாக இவரிடம் எந்த இயக்குனராலும் கதை சொல்ல முடியவில்லை. அந்த அளவுக்கு இவர் காதல் மயக்கத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
வாணி போஜன் தற்போது நடிகர் ஜெய்யுடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வருகிறார். சதா சர்வ காலமும் அவர்கள் இருவரும் ஒன்றாகவே இருப்பதால் வாணி போஜனை தற்போது யாராலும் அணுக முடியவில்லை. இதனால் அவருக்கு வரவேண்டிய வாய்ப்புகள் எல்லாம் கைநழுவி போகிறது.
இதைப் பார்த்த பலரும் வாணி போஜனுக்கு அறிவுரை கூறியிருக்கின்றனர். தற்போது வாய்ப்புகள் குறைந்து விட்டதை புரிந்து கொண்ட வாணி இனிமேல் சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்துவதற்கு முடிவெடுத்துள்ளார். அதன் காரணமாக அவர் தற்போது ஜெய்யுடன் இருந்த உறவை முறித்துக் கொண்டிருக்கிறார்.
இதை அவர் தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் சூசகமாக தெரிவித்துள்ளார். அவர் குறிப்பிட்டிருப்பதாவது எனக்கு இனிமேல் சினிமா மட்டும்தான் முக்கியம். வேறு யாரும் கிடையாது, நான் உஷார் ஆகிவிட்டேன் என்று தெரிவித்துள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் அவர் ஜெய்யை பற்றி தான் மறைமுகமாக குறிப்பிட்டிருப்பதாக கூறுகின்றனர்.
ஏற்கனவே ஜெய் நடிகை அஞ்சலியை காதலித்து அவருடைய மார்க்கெட்டை காலி செய்தார். மேலும் குடிப்பழக்கத்தின் காரணமாக சினிமா வாய்ப்புகள் இல்லாமல் அவர் சில காலம் வீட்டிலேயே முடங்கி கிடந்தார். தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்திருக்கும் ஜெய், வாணி போஜன் உடன் காதலில் விழுந்தது பலரையும் விமர்சிக்க வைத்தது.
ஆனால் அஞ்சலி அளவுக்கு இல்லாமல் வாணி போஜன் தற்போது சுதாரித்து இருக்கிறார். தற்போது பிரேக் அப் செய்து கொண்ட இருவருக்கும் அடுத்தடுத்து திரைப்படங்கள் புக் ஆகி வருகிறதாம். அதனால் அவர்கள் இருவரும் தற்போது தங்கள் வேலையில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளனர்.