மிஸ்ஸஸ் அண்ட் மிஸ்டர் படம் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்திருக்கிறார் வனிதா விஜயகுமார். சினிமா குடும்பத்தை பின்புலமாக கொண்ட இவர் சுமார் 30 வருடங்கள் கழித்து ஹீரோயினாக நடிக்கிறார் என்பது அனைவரையும் வாயை பிளக்க செய்தது.
1995 ஆம் ஆண்டு விஜய்யின் சந்திரலேகா படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார் இவர். அதன்பின் மாணிக்கம், நான் ராஜாவாகப் போகிறேன், சும்மா நச்சுன்னு இருக்கு போன்ற படத்தில் நடித்தார். இப்பொழுது வரை இவர் படங்களில் தலை காட்டிக் கொண்டுதான் இருக்கிறார்.
வனிதா விஜயகுமார் வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு படங்களில் தலைகாட்டி விடுவார். கடந்த ஆண்டு மோகன் நடிப்பில் வெளிவந்த ஹரா, அந்தகன், கடைசி தோட்டா போன்ற படங்களில் தலை காட்டினார். இப்பொழுது மிஸ்ஸஸ் அண்ட் மிஸ்டர் படத்தை இயக்கியுள்ளார்.
சினிமாவில் மட்டுமில்லாது சமூக வலைதளத்திலும் தொடர்ந்து ஆக்டிவாக இருப்பவர் வனிதா விஜயகுமார். இப்பொழுது அவருக்கு பிரச்சனை என்னவென்றால் அவர் இயக்கி இரண்டு நாட்கள் முன்பு வெளிவந்த படம் மிஸ்ஸஸ் அண்ட் மிஸ்டர். இந்த படத்தை தயாரித்தவர் அவரது மகள் ஜோவீகா.
இவர்கள் இளையராஜாவிடம் அனுமதி பெறாமல் படத்தில் அவரது பாட்டை பயன்படுத்தி விட்டனர். இதுதான் இப்பொழுது பிரச்சனையாக பிடித்துள்ளது. பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய வனிதா, இளையராஜா பொண்ணு நான், அவர் வீட்டில் தான் வளர்ந்தேன், அவர் ஒரு கடவுள் லெஜன்ட் என மொத்தமாய் ஐஸ்கட்டிகளை தூக்கி வைக்கிறார். இதன் மூலம் பாடலை பயன்படுத்தியதற்கு கோர்ட் கேஸ் என்று அலையாமல் தன்னை பாதுகாத்துக் கொண்டுள்ளார்.