முரட்டு பீசுக்குள்ள இப்படி ஒரு காதலா.. வரலட்சுமிக்காக பெயரை மாற்றிய காதல் கணவர்

Varalakshmi: வரலட்சுமி சரத்குமார் நிக்கோலாய் சச்தேவ் திருமணம் சமீபத்தில் பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது. தாய்லாந்தில் இவர்கள் திருமணம் நடந்ததை தொடர்ந்து சென்னையில் ரிசப்ஷனும் நடத்தப்பட்டது.

அதற்கு அரசியல் மற்றும் திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். மேலும் இந்த திருமணத்திற்காக நிக்கோலாய் பல கோடிகள் செலவு செய்ததாகவும் செய்திகள் வெளியானது. அது மட்டும் இன்றி வரலட்சுமிக்காக அவர் தங்கம், வைரம் என பல விலை உயர்ந்த பரிசுகளையும் கொடுத்துள்ளார்.

ஆனால் அதையெல்லாம் தாண்டி தன் காதல் மனைவிக்கு நான் செய்வது இதுதான் என அவர் பத்திரிகையாளர் முன்பு கூறியுள்ளார். திருமணத்திற்கு நன்றி சொல்லும் விதமாக பத்திரிகையாளர்களை சந்தித்த இந்த ஜோடி பல விஷயங்கள் குறித்து பேசினார்கள்.

அதில் நிக்கோலாய் திருமணத்திற்கு பின் வரலட்சுமி தன் பெயரை மாற்றிக் கொள்ள தேவையில்லை. சரத்குமார் குடும்பத்தின் பாரம்பரியம் அப்படியே இருக்கட்டும். நான் என்னுடைய மனைவிக்காக பெயரை மாற்றிக் கொள்கிறேன் என கூறினார்.

பெயரை மாற்றிய வரலட்சுமியின் கணவர்

அதன்படி இனி நிக்கோலாய் வரலட்சுமி சரத்குமார் சச் தேவ் என என்னுடைய பெயர் இருக்கும் என அறிவித்துள்ளார். இது பலருக்கும் ஆச்சரியம்தான். பொதுவாக திருமணத்திற்கு பிறகு கணவரின் பெயரை தான் பெண்கள் இணைத்துக் கொள்வார்கள்.

ஆனால் முதல் முறையாக நிக்கோலாய் இப்படி ஒரு விஷயத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறார். மேலும் திருமணத்திற்கு பிறகும் வரலட்சுமி தொடர்ந்து நடிப்பார் என்றும் கூறியுள்ளார். இதிலிருந்து அவர் எந்த அளவுக்கு தன் மனைவியை காதலிக்கிறார் என்பது தெரிகிறது.

அதைத்தொடர்ந்து பேசிய வரலட்சுமி என் காதல் நிக்கோலாய் என்றால் என் உயிர் சினிமா தான். அதை விடவே மாட்டேன். தொடர்ந்து நல்ல நல்ல கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிப்பேன் என பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தார்.

காதல் மனைவிக்காக நிக்கோலாய் செய்த விஷயம்