நடிகர் சரத்குமாரின் மகள் என்ற அடையாளத்தோடு சினிமாவுக்குள் வந்த வரலட்சுமி ஒரு சில திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கிறார். அதன் பிறகு அவருக்கு வில்லி, குணச்சித்திரம் போன்ற கதாபாத்திரங்கள் தான் அதிகமாக வர ஆரம்பித்தது. அந்த வாய்ப்புகளையும் ஏற்று நடிக்க ஆரம்பித்த அவர் இப்போது தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் தவிர்க்க முடியாத ஒரு நடிகையாக மாறி இருக்கிறார்.
அந்த வகையில் இவரை தேடி நெகட்டிவ் கதாபாத்திரங்கள் தான் அதிகமாக வர ஆரம்பித்திருக்கிறது. அதிலும் பட்டையை கிளப்பும் வரலட்சுமி பலரும் நடிக்கத் தயங்கும் தைரியமான கதாபாத்திரங்களையும் தேடி தேடி நடித்து வருகிறார். திரைப்படங்களில் மட்டுமல்லாமல் இவர் நிஜ வாழ்க்கையிலும் ஒரு தைரியமான பெண் தான். மனதில் பட்டதை பளிச்சென்று பேசக்கூடிய இவர் தன்னிடம் வம்பு செய்பவர்களுக்கும் பதிலடி கொடுக்க தவறுவதில்லை.
அது மட்டுமல்லாமல் பெண்கள் எப்படி தைரியமாக இருக்க வேண்டும் என்ற விழிப்புணர்வையும் இவர் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் சமீபத்தில் தனக்கு நடந்த அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சினை பற்றி விவரம் வெளிப்படையாக மனம் திறந்து பேசி உள்ளார். திரையுலகில் ஒரு பெண் நடிக்க வந்துவிட்டாலே அவர் அட்ஜஸ்ட்மென்ட் செய்துதான் ஆக வேண்டும் என்ற எழுதப்படாத விதி இப்போது இருக்கிறது.
அதில் வாய்ப்புகளுக்காக இது போன்ற விஷயங்களுக்கு சம்மதிக்கும் சில நடிகைகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் வாய்ப்புகளை விட மானம்தான் பெரிது என்று சம்பந்தப்பட்டவர்களை மீடியா முன் அம்பலப்படுத்தும் நடிகைகளும் இருக்கிறார்கள். அப்படித்தான் வரலட்சுமிக்கும் ஒருமுறை இது போன்ற அட்ஜஸ்ட்மென்ட் டார்ச்சர் இருந்திருக்கிறது.
அதிலும் வீடு தேடி வந்த நபர் இவரிடம் ஹோட்டலில் ரூம் போடவா என்று கேட்டு ஷாக் கொடுத்திருக்கிறார். திரைப்படங்களில் நடிப்பது மட்டுமில்லாமல் சின்னத்திரையிலும் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கும் வரலட்சுமிக்கு பிரபல சேனலில் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் வாய்ப்பு வந்திருக்கிறது. அதனால் அது குறித்து பேசுவதற்காக சம்பந்தப்பட்ட சேனலின் முக்கிய நிர்வாகி வரலட்சுமியை பார்க்க அவர் வீட்டிற்கு வந்திருக்கிறார்.
அப்போது பொதுப்படையான சில விஷயங்களை பேசிவிட்டு மற்ற விஷயங்களுக்கு எல்லாம் ஹோட்டலில் ரூம் போடலாமா என்று அந்த நபர் கேட்டிருக்கிறார். இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத வரலட்சுமி கோபப்பட்டு அந்த நபரை வீட்டை விட்டு வெளியே செல்லுங்கள் என்று கூறியிருக்கிறார். அந்த நபரும் எதிர்பார்த்தது நடக்காததால் அமைதியாக வீட்டை விட்டு சென்று இருக்கிறார்.
இந்த விஷயத்தை தற்போது மீடியாவில் தெரிவித்து இருக்கும் வரலட்சுமி ஒரு பிரபல நடிகரின் மகளான எனக்கே இது போன்ற அட்ஜஸ்ட்மென்ட் தொல்லை நடந்து இருக்கிறது. அதனால் பெண்கள் இது போன்ற விஷயங்களுக்கு தைரியமாக குரல் கொடுக்க வேண்டும் என்றும் சம்பந்தப்பட்டவர்களின் முகத்திரையை கிழிக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். வரலட்சுமி கூறியிருக்கும் இந்த விஷயம் தற்போது அதிர்ச்சியை கிளப்பியதோடு பெரும் விவாதமாகவும் மாறி இருக்கிறது.