64 வயதில் திருமணம் செய்து கொண்ட வாரிசு பட நடிகை.. பேரன், பேத்தி எடுக்கிற வயசுல 3வது திருமணம்

தளபதி விஜய்யின் வாரிசு படம் கடந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியானது. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவான இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தது. இந்நிலையில் இது குடும்ப செண்டிமெண்ட் படம் என்பதால் ஏகப்பட்ட திரை நட்சத்திரங்கள் நடித்திருந்தார்கள்.

வாரிசு படத்தில் நடித்த பிரபல நடிகை ஒருவருக்கு 64ஆவது வயதில் மூன்றாவது திருமணம் நடந்துள்ளது. இந்தச் செய்தி இப்போது இணையத்தில் வெளியாகி கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏனென்றால் பேரன், பேத்தி எடுக்க வேண்டிய வயதில் இப்போது திருமணம் தேவையா என ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகிறார்கள்.

அதாவது ஒரு காலகட்டத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற பல மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஜெயசுதா. இவர் துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். வாரிசு படத்தில் இவர் விஜய்யின் அம்மாவாக நடித்திருந்தார். அதிலும் விஜய் மற்றும் ஜெயசுதா இடையே அம்மா, மகன் பிணைப்பு மற்றும் பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் ஜெயசுதாவின் முதல் திருமணம் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் முறிவு அடைந்த நிலையில் அதன் பின்பு நிதின் கபூர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஜெயசுதாவின் இரண்டாம் கணவர் தற்கொலை செய்து கொண்டார்.

இதில் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக சில வருடங்களாக ஜெயசுதா சினிமாவில் இருந்து விலகி இருந்தார். அதன் பிறகு இப்போது தான் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். மேலும் 64 வயதாகும் ஜெயசுதா அமெரிக்கா தொழிலதிபர் பலில் ரூல்சை திருமணம் செய்து கொண்டதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு தகவல் வெளியானது.

ஆனால் இதற்கு ஜெயசுதா மறுப்பு தெரிவித்தார். ஏனென்றால் அவர் தன்னுடைய வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க உள்ளார். அதற்காக தான் எங்கு சென்றாலும் தன்னுடனே பயணிக்கிறார் என்று ஜெயசுதா கூறி இருந்தார். இப்போது ஜெயசுதா அமெரிக்காவுக்கு விடுமுறை சென்றபோது ரகசியமாக இவர்களது திருமணம் நடந்ததாக கூறப்படுகிறது.