அண்மையில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற விஜய்யின் வாரிசு படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியில், பல பிரபலங்கள் கலந்துக்கொண்டனர். மேலும் அந்த அரங்கமே ரசிகர்களின் படையால் சூழ்ந்திருந்தது. விஜய்யின் மேடை பேச்சின் போது ஒவ்வொரு வார்த்தைக்கும் விசில் சத்தம், கைத்தட்டல் என அரங்கமே அதிர்ந்தது. இந்நிகழ்ச்சியில் முக்கியமாக நடிகை ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ் ராஜ், ஷாம், வம்சி, ரஞ்சிதமே புகழ் பாடகி மான்சி உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.
இதனிடையே இப்படம் குறித்தும், விஜயை குறித்தும் பலரும் மேடையில் புகழ்ந்து பேசிய நிலையில், நடிகர் சரத்குமார் சற்று ஓவராக விஜயை புகழ்ந்து தள்ளினார் என்று தான் சொல்லவேண்டும். இந்த புகழ்ச்சியால் ரஜினி ரசிகர்கள் அவரது வீட்டிற்கு படையெடுத்து சென்றுள்ள சம்பவம் தற்போது அரங்கேறியுள்ளது. மேடையில் வாரிசு படத்தை பற்றி மட்டும் பேசாமல், சரத்குமாரின் நடிப்பில் வெளியாகி மாஸ் ஹிட்டான சூரியவம்சம் படத்தின் 175 வது நாள் வெற்றிக் கொண்டாட்டம் குறித்து பேசினார்.
அப்போது அடுத்த சூப்பர்ஸ்ட்டர் நடிகர் விஜய் தான் என அப்போதே நான் அந்த மேடையில் தெரிவித்ததாகவும், இன்று அவர் நம்பர் ஒன்னாக உள்ளது, தனக்கு மகிழ்ச்சியாக உள்ளதாக சரத்குமார் நெகிழ்ந்து பேசினார். அன்று இவர் கூறிய அந்த வார்த்தை அரங்கத்தை அதிர வைத்திருந்தாலும் இன்று அவரது வீட்டையே அதிரவைத்துள்ளது. இவர் விஜய்யை நம்பர் ஒன் என்று சொல்லி சூப்பர்ஸ்டாரை அவமானப்படுத்தியுள்ளதாக ரஜினி ரசிகர்கள் செம காண்டில் உள்ளனர்.
இதன் காரணமாக சென்னை திருவான்மியூரில் அமைந்துள்ள சரத்குமாரின் வீட்டிற்கு கூட்டமாக சென்ற ரஜினி ரசிகர்கள், அவரை முற்றுகையிட்டனர். இதனை பார்த்து மிரண்டு போன சரத்குமார், உடனே ரஜினி ரசிகர்கள் மன்ற தலைவரான சத்யநாராயணனை தொலைபேசியில் தொடர்புகொண்டு இனி இப்படியெல்லாம் பேசமாட்டேன், மன்னித்து விடுங்கள் என்று கூறியுள்ளார்.
இவரது பகிரங்கமான மன்னிப்பை ஏற்றுக் கொண்ட ரஜினி ரசிகர்கள், இனி இதுபோல ரஜினியை தாழ்த்தி எங்கேயும் பேசக்கூடாது என சரத்குமாருக்கு எச்சரிக்கை விடுத்து விட்டு கலைந்து சென்றனர். இந்த சற்றுநேர கூட்டத்தால் திருவான்மியூர் பகுதியே பரபரப்பானது. நடிகர் விஜய் ஏற்கனவே வாரிசு பட மேடையில் சற்று திமிராக எனக்கு எதிரி நான்தான் என அஜித்தை மறைமுகமாக தாக்கி பேசினார்.
இதற்கு இன்னும் அஜித் தரப்பிலிருந்து எந்த ஒரு பதிலடியும் வராமல் உள்ள நிலையில், ரஜினியின் ரசிகர்கள் அவரைப்பற்றி பேசியவுடன் கொந்தளித்துள்ளது தான் தற்போது கோலிவுட் வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. வாரிசு படம் ரிலீசாவதற்கு முன்பு இன்னும் எத்தனை சர்ச்சைகளில் தான் அப்படக்குழுவினர் மாட்டிக்கொள்ள போகிறார்கள் என்று தெரியவில்லை.