தளபதி விஜய் பீஸ்ட் படத்தை தொடர்ந்து வம்சி இயக்கத்தில் தில் ராஜூ தயாரிப்பில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் இறுதிகட்ட படப்பிடிப்பு மும்மரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் வாரிசு படம் பொங்கல் பண்டிகை முன்னிட்டு வெளியாக உள்ளதாக கூறப்பட்டது.
மேலும் அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்த படத்தின் ப்ரோமோஷன் நடக்க உள்ளதாக அறிவிப்புக்கள் வெளியானது. தற்போது வாரிசு படம் ரிலீஸ் தேதியில் இருந்து பின்வாங்கியுள்ளது. அதாவது பொங்கல் பண்டிகை முன்னிட்டு இப்படத்திற்கு போட்டியாக அஜித்தின் துணிவு படமும் வெளியாக உள்ளது.
இந்நிலையில் வாரிசு படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாக உள்ளதால் தெலுங்கு திரை உலகில் பொங்கல் பண்டிகையில் தெலுங்கு மொழியில் எடுக்கப்பட்ட படங்கள் மட்டுமே வெளியாகும் என்று தயாரிப்பு சங்கம் முடிவு செய்துள்ளனர்.
ஆகையால் வாரிசு படத்தை பொங்கல் பண்டிகை முன்னிட்டு தெலுங்கு மொழியில் வெளியிட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அஜித்தின் துணிவு படத்தின் தமிழ்நாட்டு உரிமையை உதயநிதி கைப்பற்றியுள்ளதால் இங்கு இந்த படத்திற்கு தான் அதிகமான திரையரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதனால் முதல் நாள் வசூலில் வாரிசு படம் மிகப்பெரிய சருக்களை சந்திக்க வாய்ப்பு உள்ளது. அந்தளவுக்கு தமிழ் சினிமாவில் விஜய்யை விட உதயநிதிக்கு தான் மவுசு அதிகமாக உள்ளது. ஆகையால் துணிவு படத்தின் ரிலீஸ் மற்றும் தெலுங்கு சினிமாவில் வரும் பிரச்சனை காரணமாக வாரிசு படம் ஜனவரி 26 ஆம் தேதி வெளியாக உள்ளதாம்.
அதாவது ஜனவரி 14 வெளியாக இருந்த வாரிசு படம் கிட்டத்தட்ட 10 நாட்களுக்கு தள்ளிப் போகிறது. இதனால் படக்குழு நினைத்தபடி இப்படத்தை பொங்கல் பண்டிகையில் ரிலீஸ் செய்ய முடியவில்லை என்ற கவலையில் உள்ளனர். அதேபோல் விஜய் ரசிகர்களுக்கும் இது ஏமாற்றத்தை தந்துள்ளது.