ரஜினி தான் அடுத்த எம்.ஜி.ஆர் என சொன்ன காட்டு ராஜா.. உண்மையைப் போட்டு உடைத்த நக்கீரன்

Rajini and veerappan: சினிமா திரை உலகில் எத்தனையோ முன்னணி நடிகர்கள் கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதில் இடம் பிடித்திருக்கிறார்கள். இருந்தாலும் தன் வழி தனி வழி என்பதற்கு ஏற்ப ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்து இழுத்தவர்தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

அப்படிப்பட்ட இவருடைய 73 வது பிறந்த நாளான இன்று இவருக்கு திரை பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் சமூக வலைதளங்களில் இவரை பற்றிய ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதாவது ரஜினி தான் அடுத்த எம்ஜிஆர் என்று வீரப்பன் சொல்லியிருக்கிறார்.

இவர் இப்படி சொன்னது இப்பொழுது வரை ரஜினிக்கு தெரியாது என்று நக்கீரன் அவர்கள் பேட்டி அளித்திருக்கிறார்கள். அதாவது கன்னட நடிகர் ராஜ்குமாரை வீரப்பன் கடத்தி வைத்திருந்த பொழுது அவரை காப்பாற்ற வேண்டும் என்று பல வழிகளில் ரஜினி முயற்சி எடுத்திருந்தார். அந்த நேரத்தில் வீரப்பனை கடுமையாக பேசி ரஜினி விமர்சித்து இருந்தார்.

Also read: 48 வருடம் அசைக்க முடியாத நாற்காலி.. 73 வயதில் ரஜினி சேர்த்து வைத்த சொத்து மதிப்பு

ஆனாலும் வீரப்பன் ரஜினியை பற்றி சொன்னது என்னவென்றால் எம்ஜிஆர் போல யாராலும் இருக்க முடியாது. ஆனால் அந்த இடத்திற்கு தகுதியானவர் ரஜினி தான். அதற்கு காரணம் அவர் மிகவும் எளிமையான வாழ்க்கையை விரும்பக் கூடியவர். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எப்படி மரியாதை கொடுக்க வேண்டும் என்று தெரிந்து நற்பண்புகளை வைத்து இருக்கக் கூடியவர்.

அத்துடன் கடவுள் மீது அவருக்கு இருக்கும் அதீத நம்பிக்கை கண்டிப்பாக அவர் அரசியலில் வெற்றி பெற வைக்கும். அந்த வகையில் அவர் தனித்து இருந்தால் நிச்சயம் வெற்றி வாகை சூட வாய்ப்பிருக்கிறது என்று ரஜினி பற்றி வீரப்பன் எம்ஜிஆரை வைத்து கம்பர் பண்ணி பேசி இருக்கிறார். அப்படிப்பட்ட வீடியோ இதுவரை வெளி வராத பொழுது இன்று வெளியாகி இருப்பது ரசிகர்களிடம் மிகப்பெரிய சந்தோஷத்தை உண்டாக்கி இருக்கிறது.

Also read: ரஜினியின் 10 ஹேர் ஸ்டைலை உருவாக்கிய விஜய்யின் தம்பி.. இப்ப வரை பெருமை பேசும் தருணம்