திராட்டில் விட்டு கோட்-க்கு போன வெங்கட் பிரபு.. ஒரே கல்லில் ரெண்டு பலாப்பழத்துக்கு பிளான் பண்ணிய சத்திய ஜோதி

Venkat Prabhu: யுவன் மற்றும் வெங்கட் பிரபு உருவாக்கத்தில் ஒரு புதிய விஜய்யை கோட் படத்தின் மூலம் பார்க்கலாம். சமீபத்தில் விஜய் படங்கள் அனைத்தும் மாசாகவும், அதிரடியான சண்டை காட்சிகள் என பார்த்து பார்த்து ரொம்பவே போர் அடித்து விட்டது. அதனால் தற்போது ஒரு ஜாலியான படமாக வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வருகிறது. இவர் எடுத்த படங்களிலேயே அஜித்துக்கு மங்காத்தா மற்றும் சிம்புக்கு மாநாடு மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.

இந்த வரிசையில் விஜய்க்கு கோட் படமும் இடம்பெறும் என்பதில் சந்தேகமே இல்லை. ஏனென்றால் வெங்கட் பிரபு ஹீரோக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதை தாண்டி படம் ஒரு என்டர்டைன்மென்ட் ஆக இருக்க வேண்டும் என்று நினைத்து எடுக்கக் கூடியவர். அந்த வகையில் இவர்கள் காம்போவில் உருவாக்கி வரும் படம் ரசிகர்களிடமிருந்து கண்டிப்பாக வரவேற்பை பெற்றுவிடும்.

இதற்கிடையில் வெங்கட் பிரபு, கோட் படத்தில் கம்மிட் பண்ணுவதற்கு முன்னதாக சத்திய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் ஒரு தெலுங்கு படத்தை பண்ணுவதற்கு கமிட்டாகி இருந்தார். அதில் ஹீரோவாக கிச்சா சுதீப் நடிக்கப் போகிறார். இதற்கான வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது தான் வெங்கட் பிரபுவுக்கு திடீரென்று விஜய்யிடம் இருந்து கால் வந்திருக்கிறது.

Also read: GOAT ஃபர்ஸ்ட் சிங்கிளுக்கு இப்ப வாய்ப்பே இல்லை.. வெங்கட் பிரபு கொடுத்த ஷாக்

உடனே நாம் இருவரும் சேர்ந்து படம் பண்ணலாம் என்று விஜய் சொன்னதால், வெங்கட் பிரபு சத்யஜோதி நிறுவனத்திடம் சொல்லி அனுமதி வாங்கிய பின் கோட் படத்தில் இணைந்தார். அவரும் எந்தவித மறுப்பும் தெரியாமல் வெங்கட் பிரபுவுக்கு அனுமதி கொடுத்தார். அதற்கு காரணம் விஜய்யை வைத்து வெங்கட் பிரபு படம் இயக்கி வெளிவந்த பிறகு அது ரொம்பவே இன்னும் கெத்தாக இருக்கும்.

அதன் மூலம் தான் தயாரிக்க கூடிய படத்திற்கு ஒரு பெரிய பிரமோஷன் கிடைத்துவிடும் என்று தயாரிப்பாளர் சத்தியஜோதி நினைத்து வெங்கட் பிரபுவுக்கு ஓகே சொல்லிவிட்டார். அந்த வகையில் கோட் படத்திற்கு பிறகு வெங்கட் பிரபு சத்தியஜோதி தயாரிப்பில் கிச்சா சுதீப் வைத்து ஒரு படத்தை பண்ண போகிறார். அடுத்து சிவகார்த்திகேயனும் இவருடைய தயாரிப்பில் இணைந்து படம் பண்ண போகிறார். ஆக மொத்தத்தில் ஒரே கல்லில் இரண்டு மாங்காக்கு குறி வைத்து இருக்கிறார் தயாரிப்பாளர்.

Also read: GOAT படத்தில் விஜய்க்கு தங்கச்சி இவங்க தான்.. வெங்கட் பிரபு வலை வீசி கண்டுபிடித்த நடிகை