ஆடுகளம் தொடங்கி அசுரன் வரை தொடர் வெற்றிகளை கொடுத்த ஒரே இயக்குனர் வெற்றிமாறன் மட்டுமே. ஆரம்ப காலங்களில் நான்கு வருடங்களுக்கு ஒரு படம் கொடுத்த வெற்றிமாறன், தற்போது ஒரு வருடத்தில் இரண்டு படங்கள் கொடுத்து வருகிறார். தமிழ் சினிமா அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேறி செல்வதற்கு இவரும் ஒரு காரணம் என்று சொல்லலாம்.
தற்போது சூரி ஹீரோவாக நடிக்கும் பெயரிடப்படாத படத்தை இயக்கி வருகிறார். இதனை தொடர்ந்து சூர்யா நடிப்பில் வாடிவாசல் படத்தை இயக்கவுள்ளார். மேலும் இவர் கதையில் பல திரைப்படங்கள் உருவாகி வருகின்றன.
இந்நிலையில் வெற்றிமாறன் அடுத்ததாக ஜி5 இணையதளத்தில் உருவாக உள்ள வெப்சீரிஸ் தொடர் ஒன்றை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது தமிழ் சினிமாவில் வெப் சீரிஸ் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இயக்குனர்கள், ஹீரோக்கள் என அனைவரின் கவனமும் வெப்சீரிஸ் பக்கம் திரும்பியுள்ளது. ரசிகர்கள் மத்தியிலும் இதற்கு பரவலான வரவேற்பு இருந்து வருகிறது.
வெற்றிமாறனுக்கு செல்லும் இடமெல்லாம் வெற்றி தான். ஓடிடி தளத்திலும் ஜொலிக்கட்டும்….