Simbu : வெற்றிமாறன், சிம்பு கூட்டணி உறுதியாகி விறுவிறுப்பாக படப்பிடிப்பும் தொடங்கிவிட்டது. அதாவது இப்போது புரொமோ ஷூட் தான் எடுத்து வருகிறார்களாம். இதற்கான படப்பிடிப்பு ஜூலை 16ஆம் தேதி தொடங்கும் என்று கூறப்படுகிறது.
இந்த சூழலில் நேற்றைய தினம் இந்த படத்தின் போஸ்டர்கள் வெளியானது. ஆகையால் வடசென்னை 2 படம் என்று இது உறுதியான நிலையில் ராஜன் வகையறா அணியில் சிம்பு நடிக்கிறார் என்பது போஸ்டரில் தெள்ளத் தெளிவாக தெரிகிறது.
ஆகையால் படத்தில் தனுஷும் இடம்பெற இருக்கிறார். இதைத்தொடர்ந்து இப்போது ப்ரோமோ சூட்டிற்கு கிட்டதட்ட 25 லட்சம் செலவு செய்துள்ளாராம் வெற்றிமாறன். அதாவது ஒரு நாள் முழுக்க ப்ரோமோ சூட் எடுக்க திட்டமிட்டு இருந்தனர்.
ப்ரோமோவுக்கு பல லட்சங்களை செலவு செய்யும் வெற்றிமாறன்
இதில் இயக்குனர் நெல்சனும் ப்ரோமோவில் இடம் பெற இருக்கிறார். இந்த சூழலில் முதல் அரை நாள் சூட்டிங் எடுத்த பின்பு வெற்றிமாறன் எடிட்டிங் செய்திருக்கிறார். அதில் சிம்புவின் ஹேர் ஸ்டைல் வெற்றிமாறனுக்கு பிடிக்கவில்லையாம்.
எனவே ஹேர் ஸ்டைலை மாற்றி அடுத்த அரை நாள் திரும்ப அதே சூட்டிங்கை எடுத்துள்ளார். மேலும் இவர்கள் ஷூட்டிங் எடுக்கும் இடத்திற்கு ஒரு நாளைக்கு மட்டும் கிட்டத்தட்ட 15 லட்சம் செலவாகுமாம். இப்போது இது இரண்டு நாட்களாக மாறியதால் கிட்டத்தட்ட 25 லட்சத்திற்கும் அதிகமாக செலவாகி உள்ளது.
வெற்றிமாறன் எவ்வளவு செலவு மற்றும் காலவிரயம் ஆனாலும் தரமாக கொடுக்க வேண்டும் என்று நினைக்க கூடியவர். இதனால் சிம்புவின் தலை முதல் நுனிவரை பார்த்து பார்த்து செதுக்கி வருகிறார். ஆகையால் வடசென்னை மிஞ்சும் அளவுக்கு தான் இந்த படம் உருவாகும் என்பதில் எள் அளவும் சந்தேகம் இல்லை.