Vetrimaran: அஜித்துக்கு எவ்வாறு விடாமுயற்சி படம் இழுத்தடிதோ அதேபோல் தான் வாடிவாசல் படமும் இருக்கிறது. பல வருடங்களுக்கு முன் வெற்றிமாறன் இயக்கத்தில் தாணு தயாரிப்பில் சூர்யா நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு வாடிவாசல் என்ற தலைப்பும் வைக்கப்பட்டது.
மேலும் காளைகளும் சூர்யா வளர்த்து வந்தார். அதேபோல் வெளிநாட்டில் காளைகள் வைத்து அனிமேஷன் வேலைகளும் நடந்து வந்தது. விரைவில் இந்த படம் தொடங்க உள்ளதாக தயாரிப்பாளர் தாணு பலமுறை கூறியிருக்கிறார்.
விடுதலை படம் முடிந்த பிறகு வெற்றிமாறன் வாடிவாசலை தொடங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சூர்யா இப்போது ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக வாடிவாசல் என்று எதிர்பார்த்த நிலையில் வெங்கி அட்லூரி படத்தின் பூஜை என்று போடப்பட்டது.
தள்ளிப்போகும் வெற்றிமாறனின் வாடிவாசல்
மற்றொருபுறம் வெற்றிமாறனும் சிம்புவின் படத்தை இயக்க உள்ளாராம். இந்த படத்தை வி கிரியேஷன்ஸ் தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. முதல்முறையாக வெற்றிமாறன் சிம்புவுடன் இணைவது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.
அதோடு மட்டுமல்லாமல் அடுத்ததாக தனுசுடன் இணைந்து வட சென்னை 2 படத்தை வெற்றிமாறன் எடுக்க உள்ளார். இவ்வாறு விடாமுயற்சி போல் வாடிவாசல் இழுத்தடிப்பதால் ரூட்டை மாற்றி மற்ற நடிகர்களின் படங்களை வெற்றிமாறன் எடுக்க முன்வந்துள்ளார்.
ஏனென்றால் வெற்றிமாறன் படத்தில் கமிட் ஆகிவிட்டால் குறைந்த பட்சம் இரண்டு மூன்று வருடங்களுக்கு வேறு படங்களில் நடிக்க முடியாது. சூர்யா இப்போது அடுத்தடுத்த படங்களில் நடித்து வருவதால் வாடிவாசல் இன்னும் சில வருடங்கள் தள்ளி போக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.