வெற்றிமாறன் எண்ணத்தில் மண்ணள்ளி போட்ட தயாரிப்பாளர்.. விரக்தியில் வாத்தியாருக்கு வைத்த செய்வினை

2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பல போராட்டங்களுக்குப் பிறகு விஜய் சேதுபதியை வைத்து வெற்றிமாறன் இயக்கிய விடுதலை படம் வெளிவந்தது. ஏற்கனவே இந்த படம் 2001 ஆம் ஆண்டு வெளிவருவதாக அறிவிக்கப்பட்டது, ஆனால் இரண்டு வருடம் தாமதமாகவே வெளிவந்தது. காமெடி நடிகர் சூரி ஹீரோவாக அவதாரம் எடுத்த முதல் படம்

விடுதலை முதல் பாகம் ரசிகர்களிடம் பேராதரவு பெற்றது. அடுத்த மூன்றே மாதங்களில் அந்த படத்தின் இரண்டாம் பாகமும் வெளிவரும் என அப்பொழுதே கூறப்பட்டது ஆனால் ஒரு வருடத்திற்கு மேல் ஆகியும் இரண்டாம் பாகம் வரவே இல்லை. இதற்கு பல காரணங்கள் கூறப்பட்டுள்ளது.

விஜய் சேதுபதி பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் அவரது கால் சீட் கிடைப்பது சிரமமாக இருந்தது எனவும், வெற்றிமாறன் எடுத்த காட்சிகளில் முழு திருப்தி அடைவதில்லை மீண்டும் மீண்டும் திருப்தி அடையும் வரை எடுக்கிறார் எனவும் கூறி வந்தனர். ஆனால் இப்பொழுது தயாரிப்பாளர் எல்டர்டு குமார் எல்லாத்துக்கும் செக் வைத்துள்ளார்.

டிசம்பர் 20ஆம் தேதி கிறிஸ்மஸ் மற்றும் நியூ இயர் விடுமுறைகளுக்கு இந்த படத்தை ரிலீஸ் செய்வதாக அறிவித்துவிட்டார் தயாரிப்பாளர் எல்டர்டு குமார். இதற்கு இயக்குனர் வெற்றிமாறன் இடம் எந்த ஒரு அனுமதியும் கேட்கவில்லை அவரே தேதியை முடிவு செய்து அறிவித்துவிட்டார், இதனால் கடும் அப்செட்டில் இருக்கிறார் வெற்றிமாறன்.

விடுதலை 2 படத்திற்கு ஒவ்வொரு காட்சிகளாக செதுக்கி வந்த வெற்றிமாறனுக்கு இந்த ரிலீஸ் தேதியால் படத்தை சீக்கிரம் முடிக்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் 200 சதவீதம் திருப்தி வேண்டும் என எதிர்பார்க்கும் அவருக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எடுத்தவரை போதும் என்ற மனநிலைக்கு கூட வந்து விட்டாராம். படத்தில் முழு திருப்தி அடைந்தாரா என்பது கேள்விக்குறிதான்.

Leave a Comment