2 கோடிக்கு ஆசைப்பட்ட மொத்தத்தையும் இழந்த வெற்றிமாறன்.. பாலாவை போல் தூக்கி எறிந்த சூர்யா

இயக்குனர் வெற்றிமாறன் வித்தியாசமான கதை களத்துடன் படங்களை எடுத்து வெற்றி கண்டவர். இவருடைய இயக்கத்தில் வெளியான எந்த படங்களுமே தற்போது வரை சோடை போனதில்லை. இந்நிலையில் சூரி, விஜய் சேதுபதி ஆகியோரை வைத்த விடுதலை படத்தின் முதல் மற்றும் இரண்டாம் பாகத்தை வெற்றிமாறன் இயக்கி வருகிறார்.

இதைத்தொடர்ந்து சூர்யா இயக்கத்தில் வெற்றிமாறன் இயக்கத்தில் முன்பே தொடங்கப்பட்ட படம் வாடிவாசல். ஆனால் அதன் பிறகு சூர்யா பாலா இயக்கத்தில் உருவான வணங்கான் படப்பிடிப்பில் பிசியாக இருந்தார். இப்போது பாலாவுடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இந்த படத்தில் இருந்து சூர்யா விலகி விட்டார்.

இப்போது அதே நிலைமை தான் வெற்றிமாறனுக்கும் ஏற்பட உள்ளது. அதாவது வெற்றிமாறன் தயாரிப்பில் கலையரசன் நடிப்பில் சமீபத்தில் ஓடிடியில் வெளியான வெப் சீரிஸ் பேட்டை காளி. இந்தப் படமும் ஜல்லிக்கட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்தது. சூர்யாவின் வாடிவாசலும் ஜல்லிக்கட்டு சம்பந்தமான படம் தான்.

ஆகையால் பேட்டை காளி படத்தில் இடம்பெற்ற காட்சிகள் வாடிவாசல் சில காட்சிகளை ஞாபகப்படுத்துவதாக உள்ளதாக கூறி சூர்யா இதுக்கு மேல் வாடிவால் படம் வெளியானால் மக்கள் ஆர்வமாக பார்க்க மாட்டார்கள் என்று யோசித்து உள்ளாராம். ஆனால் பேட்டை காளி படத்தை வெற்றிமாறன் தயாரிக்கவில்லை.

அதாவது அந்த படத்தில் தனது பெயரை பயன்படுத்தி கொள்ள மட்டும் 2 கோடி வாங்கிக் கொண்டுள்ளார். ஆகையால் பேட்டை காளி மற்றும் வாடிவாசல் படத்திற்கு எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால் சூர்யா நம்பாமல் வாடிவாசல் படத்தில் நடிக்க விருப்பமில்லாமல் உள்ளாராம்.

இப்படி 2 கோடிக்கு ஆசைப்பட்டு வெற்றிமாறன் தற்போது தனது கனவு படம் வருமா என்ற கவலையில் உள்ளாராம். இப்போது பாலா நிலைமை வெற்றிமாறனுக்கும் ஏற்படுமா என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. ஆனால் சூர்யா தரப்பில் சிறுத்தை சிவா உடன் படத்தை முடித்த பிறகு வாடிவாசல் படத்தில் நடிப்பார் என்று கூறப்படுகிறது.