லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் 7 வருடமாக காதலித்து கடந்த ஜூன் 9ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார்கள். இந்நிலையில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவரும் தங்களது பட வேலைகளில் பிஸியாக இருந்தனர்.
இந்நிலையில் வாடகை தாய் மூலம் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவருக்கும் இரட்டை குழந்தை பிறந்துள்ளது. திருமணம் ஆகி 4 மாதங்களில் வாடகை மூலம் குழந்தை பெற்றுக் கொண்டார்கள் என்று அவர்கள் மீது குற்றச்சாட்ட வைக்கப்பட்டது. ஆனால் ஆறு வருடங்களுக்கு முன்பே தாங்கள் ரிஜிஸ்டர் மேரேஜ் செய்ததாக நயன்தாரா, விக்கி தரப்பில் கூறப்பட்டது.
மேலும் கடந்த டிசம்பர் மாதமே வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள விண்ணப்பித்ததாக எல்லா ஆதாரங்களையும் சமர்ப்பித்தனர். தற்போது இந்த தல தீபாவளியை தங்களது இரட்டை ஆண் குழந்தைகளுடன் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் கொண்டாடியுள்ளனர்.
அவர்களது குழந்தைகளுடன் இருக்கும் வீடியோவை விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும் நயன், விக்கி ஜோடிக்கு ரசிகர்கள் தல தீபாவளி வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.
நயன்தாரா பாலிவுட்டில் ஷாருக்கானுக்கு ஜோடியாக தற்போது ஜவான் படத்தில் நடித்து வருகிறார். அட்லி இயக்கும் இந்த படத்தில் ஷாருக்கான் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதில் வில்லன் ஷாருக்கானுக்கு தான் நயன்தாரா ஜோடியாக உள்ளார்.
அதேபோல் விக்னேஷ் சிவன் அஜித்தின் 62 ஆவது படத்தை இயக்கப் போகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இவ்வாறு நயன் மற்றும் விக்கி தங்களது பட வேலைகளில் பிஸியாக இருந்தாலும் குழந்தைக்கான நேரத்தை ஒதுக்கி வருகிறார்கள்.
