விக்கி-நயன் காதல் திருமணத்திற்கு டஃப் கொடுக்கும் நடிகை.. 450 ஆண்டுகள் பழமையான அரண்மனையில் பிரம்மாண்டமான பார்ட்டி

கடந்த ஜூன் மாதம் விக்கி-நயன் காதல் திருமணம் சென்னையில் பிரைவேட் ரிசார்ட்ஸ் ஒன்றில் கோலாகலமாக நடைபெற்றது. தற்போது இவர்களது திருமணத்திற்கு டாப் கொடுக்கும் வகையில் கொழுப்பு மொழுக்குனு இருக்கும் நடிகை ஒருவரின் திருமணம் நடைபெறுவதை குறித்து சோசியல் மீடியாவில் வைரலாக பேசப்படுகிறது.

அதாவது தமிழில் தனுஷ் நடித்த மாப்பிள்ளை என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி, அதன் பிறகு ஜெயம் ரவியின் எங்கேயும் காதல் என்ற திரைப்படத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார் நடிகை ஹன்சிகா மோத்வானி. இந்நிலையில் பல சர்ச்சைகளில் சிக்கி நடிகர் சிம்புவை காதலித்து வந்த ஹன்சிகா சில காரணங்களினால் அவரை பிரேக்கப் செய்தார்.

இதைத்தொடர்ந்து மகா படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் சிம்பு நடித்திருந்தார். இதைத்தொடர்ந்து மீண்டும் சிம்புவுடன் ஹன்சிகா இணைய உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் தனது நீண்ட கால நண்ரான தொழில்பர் சோஹேல் கதுரியா என்பவரை ஹன்சிகா விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளார்.

இவர்களது திருமணம் 450 ஆண்டுகளுக்கு பழமையான 450 ஆண்டுகளுக்கு பழமையான ஜெய்ப்பூர் அரண்மனையில் பிரம்மாண்டமாக நடக்க உள்ளது. இதற்காக மிகவும் பழமையான அந்த அரண்மனையை தற்போது புதுப்பித்து வருகிறார்களாம். மேலும் வருகின்ற டிசம்பர் 4ஆம் தேதி ஹன்சிகாவின் திருமணம் நடக்க உள்ளது.

திருமணத்திற்கான கொண்டாட்டங்கள் டிசம்பர் 2 ஆம் தேதியே தொடங்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதைத் தொடர்ந்து டிசம்பர் 3 ஆம் தேதி மெஹந்தி மற்றும் சங்கீத் விழாக்கள் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. இதற்கு முன்பு நடிகை ஹன்சிகா தனது நெருங்கிய நண்பர்களுக்கு பேச்சுலர் பார்ட்டி கொடுத்திருக்கிறார்.

இந்தப் பார்ட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்களும் வீடியோஸ்களும் தற்போது இணையத்தில் வைரலாக பரவுகிறது. இதில் ஹன்சிகா மணப்பெண் என எழுதப்பட்ட உடையை அணிந்து தேவதை போல் காட்சியளிக்கிறார். இவருடைய நண்பர்கள் அனைவரும் கருப்பு உடையில் கலக்கிறார்கள்.

மேலும் விக்கி-நயன் திருமணத்தை நெட்பிக்ஸ் நிறுவனம் கைப்பற்றிய தற்போது கோலாகலமாக நடக்கவிருக்கும் ஹன்சிகா மோத்வானியின் திருமணத்தின் ஒளிபரப்பு உரிமையை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி நிறுவனம் பெரும் தொகையை கொடுத்து கைப்பற்றி இருக்கும் தகவலும் வெளியாகி உள்ளது.