புலி வருது என பூச்சாண்டி காட்டும் விடாமுயற்சி.. மீண்டும் புதிய தேதி சொல்லி குழப்பும் படக்குழு

அஜித்தின் துணிவு படம் வெளியாகி பல மாதங்கள் ஆகியும் தற்போது வரை அடுத்த படம் தொடங்காமல் இருக்கிறது. முதலில் விக்னேஷ் சிவன் அஜித் படத்தை இயக்க இருந்த நிலையில் சில காரணங்களினால் ஏகே 62 பட வாய்ப்பு அவரிடம் இருந்து பரிபோனது. அதன்படி மகிழ்திருமேனி படத்தை இயக்குவதாக கூறப்பட்டது.

இதை லைக்கா அதிகாரப்பூர்வமாக அஜித்தின் பிறந்தநாள் அன்று விடாமுயற்சி என்ற டைட்டிலுடன் வெளியிட்டது. மே 1ஆம் தேதி இந்த அறிவிப்பு வந்த நிலையில் தற்போது வரை படப்பிடிப்பு தொடங்காமல் இழுத்தடித்துக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு முறையும் இந்த நாள் படப்பிடிப்பு தொடங்கும் என்று அறிவிப்பு வருகிறது.

ஆனால் சில காரணங்களினால் தள்ளி போய் வந்த நிலையில் ஆகஸ்ட் இரண்டாம் வாரத்தில் கண்டிப்பாக தொடங்கும் என உறுதி அளித்திருந்தனர். அதற்குள் அஜித் மீண்டும் பைக் சுற்றுப்பயணம் மேற்கொள்ள தொடங்கி விட்டார். இப்போது விடாமுயற்சி படத்தை பற்றிய முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகி இருக்கிறது.

அதாவது விடாமுயற்சி படம் இனி புதிய பாதையில் பயணிக்க இருக்கிறதாம். செப்டம்பர் 5ஆம் தேதி இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி இடைவிடாமல் 100 நாட்கள் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டு இருக்கிறார்களாம். அதுவும் இப்போது லண்டனில் படப்பிடிப்பை நடத்தலாம் என்ற முடிவுக்கு வந்து வந்துவிட்டார்கள்.

காரணம் அஜித் லண்டனில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் என்பதாலா அல்லது விடாமுயற்சி படத்திற்கு லண்டன் சரியான இடமாக இருக்கும் என்பதா என்று தெரியவில்லை. ஆனால் கண்டிப்பாக இந்த முறை படப்பிடிப்பு தொடங்கும் என உறுதியாக கூறியிருக்கிறார்கள். என்னென்ன மாற்றம் வரும் என்பது பிறகு தான் தெரியவரும்.

புலி வருது, புலி வருது என ஒவ்வொரு முறையும் பூச்சாண்டி காட்டிக் கொண்டிருக்கும் விடாமுயற்சி இந்த முறையாவது சொன்னதை செய்யுமா என ரசிகர்கள் புலம்ப ஆரம்பித்து விட்டார்கள். விஜய் லியோ படத்தை முடித்துவிட்டு தளபதி 68 படத்திற்கு தயாரான நிலையில் அஜித் இன்னும் விடாமுயற்சி படத்தை தொடங்காமல் இருப்பது அவரது ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.