ஏ சர்டிபிகேட் வாங்கிய விடுதலை படம்.. சென்சாரில் கட் செய்யப்பட்ட 12 வார்த்தைகள்

வெற்றிமாறனின் படங்களுக்கு எப்போதுமே இளைஞர் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். ஏனென்றால் கற்பனைக்கும் அப்பாற்பட்ட படங்களை எப்போதுமே வெற்றிமாறன் எடுக்க மாட்டார். சாதாரண சூழலில் அல்லது ஒரு பகுதியில் நடக்கும் நாம் பார்க்கும் விஷயங்களை மட்டுமே படத்தில் வைத்திருப்பார்.

அதனால் தான் தொடர்ந்து வெற்றிமாறனின் படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி அடைகிறது. இந்த சூழலில் வெற்றிமாறனின் விடுதலை படம் வருகின்ற மார்ச் 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சூரி, விஜய் சேதுபதி போன்ற பிரபலங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் சென்சாருக்கு அனுப்பப்பட்ட விடுதலை படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டிருந்தது. இதற்கு முன்னதாக வெற்றிமாறனின் பொல்லாதவன் மற்றும் வடசென்னை படங்களுக்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டிருந்தது. மேலும் விடுதலை படத்தில் மோசமான காட்சிகள் மற்றும் கெட்ட வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டதாக தகவல் வெளியானது.

இதில் காது கொடுத்து கேட்க முடியாத அளவுக்கு மோசமான கெட்ட வார்த்தைகளை சென்சார் போர்டு கட் செய்துள்ளது. கிட்டதட்ட விடுதலை படத்தில் 12 கெட்ட வார்த்தைகளை சென்சார் கத்தரித்து உள்ளது. வெற்றிமாறன் படத்தில் இப்படியா என ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

மேலும் விடுதலை படத்தின் திரைக்கதைக்கு சில காட்சிகள் தேவைப்பட்டதால் சென்சார் போர்டில் அதை கட் செய்ய வெற்றிமாறன் விரும்பவில்லை. அதனால் தான் இந்த படத்திற்கு ஏ சர்டிபிகேட் கொடுக்கப்பட்டுள்ளது. ஆகையால் 18 வயதிற்கு மேல் உள்ளவர்கள் மட்டுமே விடுதலை படத்தை பார்க்க முடியும்.

அதுமட்டுமின்றி படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 30 நிமிடங்கள் ஆகும். மேலும் விடுதலை படத்தை தமிழ்நாட்டில் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிடுகிறது. மேலும் படம் வெளியாக இன்னும் சில நாட்களை உள்ளதால் படத்தைப் பற்றிய அப்டேட்டுகள் தொடர்ந்து வெளியாகி வருகிறது.

viduthalai- censor board