வெற்றி இயக்குனராக வளம் வந்து கொண்டிருக்கும் வெற்றிமாறன் தற்போது விடுதலை படத்தை இயக்கியுள்ளார். காமெடி நடிகராக சுற்றித்திரிந்த சூரி முதல் முறையாக கதாநாயகனாக களம் காண்கிறார். அவருக்கு ஈடு கொடுக்கும் விதமாக விஜய் சேதுபதியும் இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
ஆரம்பத்தில் விடுதலை படம் சிறிய பட்ஜெட்டில் எடுக்கலாம் என்ற யோசனையில் தொடங்கப்பட்டது. அதன் பிறகு தான் இந்த படத்தில் விஜய் சேதுபதியை நடிக்க வைக்க படக்குழுவினர் முடிவு செய்தனர். அதுவும் கெஸ்ட் ரோலில் நடிப்பதாக இருந்த விஜய் சேதுபதி அதன் பின்பு முக்கிய கதாபாத்திரமாக மாறிவிட்டார்.
மேலும் வெற்றிமாறன் என்ன நினைத்தாரோ தெரியவில்லை விடுதலை படத்தை இரண்டு பாகங்களாக பிரித்து விட்டார். இதனாலே விடுதலை படத்தின் படப்பிடிப்பு நிறைய நாட்கள் இழுத்துக் கொண்டே போய்விட்டது. எப்போது இந்த படம் ரிலீஸாகும் என்று ரசிகர்களே அழுத்து விட்டனர்.
மேலும் 4 கோடி பட்ஜெட்டில் எடுத்து முடிக்கலாம் என்று திட்டம் தீட்டு இருந்த தயாரிப்பாளர் தலையில் இடியை இறக்கி இருந்தார் வெற்றிமாறன். அதாவது விடுதலை படம் முடியும்போது படத்தின் பட்ஜெட்டை விட பத்து மடங்கு அதிகமாக அதாவது 40 கோடிக்கு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது.
ஆழம் தெரியாமல் காலை விடுவது போல தற்போது காமெடி நடிகர்கள் ஹீரோவாக நடித்த படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. இதுவரை வெற்றிமாறன் தோல்வி படங்களை கொடுத்ததில்லை என்ற நம்பிக்கையில் தயாரிப்பாளர் கேட்ட பணத்தை போட்டு படத்தை எடுத்து முடித்துள்ளார்.
இந்நிலையில் வருகின்ற 31ஆம் தேதி திரையரங்குகளில் விடுதலை படம் வெளியாக இருக்கிறது. ஆகையால் போட்ட பட்ஜெட்டை காட்டிலும் படம் வசூலை அள்ளுமா என தயாரிப்பாளர் குழப்பத்தில் உள்ளாராம். ஆனால் கண்டிப்பாக 100 கோடி வசூலை அள்ளும் என வெற்றிமாறன் தைரியம் சொல்லி வருகிறாராம்.