Vignesh Shivan-Nayanthara: லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா சமீபத்தில் நடித்த ஜவான் படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. ஆனால் திருமணத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் ஹிட் கொடுக்க முடியாமல் நயன்தாரா திணறி வருகிறார். ஆனாலும் சினிமாவை தாண்டி இவர் நிறைய தொழில்களில் முதலீடு செய்து வருகிறார்.
அந்த வகையில் விக்கி மற்றும் நயன்தாரா இருவரும் துபாயில் நிறைய தொழில் செய்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் மேக்கப் சம்பந்தமான பொருட்களிலும் முதலீடு செய்து உள்ளார்கள். இதைத்தொடர்ந்து நயன், விக்கி இருவரும் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பின் மூலம் படங்களை தயாரித்து வருகிறார்கள்.
இதைத்தவிர்த்து ரியல் எஸ்டேட், காபி ஷாப் போன்ற எண்ணில் அடங்காத தொழில்கள் இவர்களுக்கு இருக்கிறது. இந்த சூழலில் புதிய தொழிலில் இப்போது பல கோடிகள் முதலீடு செய்ய உள்ளனர். அதாவது இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவுக்கு கடந்த ஆண்டு திருமணம் ஆன நிலையில் சில மாதங்களிலேயே வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்தனர்.
அவ்வப்போது தங்கள் குடும்ப புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு வந்தார். அதோடு மட்டுமில்லாமல் சமீபத்தில் நயன்தாராவும் இன்ஸ்டாகிராமில் இணைந்திருந்தார். இதுவும் ஏதாவது தொழில் சம்பந்தமான தேவைக்காகத்தான் தொடங்கியுள்ளார் என்ற பேச்சுக்கள் எழுந்தது.
இந்த சூழலில் டிவைன் ஃபுட்ஸ் என்ற நிறுவனத்தில் நயன், விக்கி தம்பதியினர் முதலீடு செய்கின்றனர். இயற்கை சார்ந்த உணவுகளை தயாரித்து வரும் இந்நிறுவனத்தில் இப்போது நயன்தாரா முதலீடு செய்திருக்கும் விஷயம் தான் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இப்போது ஒரு தொழிலதிபராகவே நயன்தாரா மாறிவிட்டார்.
சினிமாவில் சம்பாதித்த பணத்தை மற்ற தொழில்களில் முதலீடு செய்து வருமானம் ஈட்டி வருகிறார். ஒரு கட்டத்திற்கு மேல் சினிமா கைவிட்டாலும் தொழில் ரீதியாக அவரது வளர்ச்சி பெரிய அளவில் இருக்கும். அதுவும் டிவைன் ஃபுட்ஸ் நிறுவனம் வரும் வருடங்களில் மிகப்பெரிய வளர்ச்சி அடையும் என்பதால் கணக்குப் போட்டு தான் இதில் முதலீடு செய்துள்ளார்கள். இவ்வாறு தங்களது வாரிசுக்கு இப்போதே நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் சொத்து சேர்த்து வருகிறார்கள்.
புதிய தொழிலில் முதலீடு செய்துள்ள விக்கி, நயன்
