நயன்தாராவை வைத்து அஜித்துக்கு கொடுக்கப் போகும் நோஸ்கட்.. புளியங்கொம்பை பிடித்த விக்னேஷ் சிவன்

அஜித்தின் துணிவு படத்திற்குப் பிறகு ஏகே 62 படத்தை விக்னேஷ் சிவன் தான் இயக்கப் போகிறார் என்று பெரிய எதிர்பார்ப்புடன் இருந்த இவருக்கு ஏமாற்றம் தான் கிடைத்தது. ஏனென்றால் இவர் அதிக அளவில் ஈடுபாடு காட்டாமல் இருந்ததால் அஜித் மற்றும் லைக்கா நிறுவனம் இவரை இந்த ப்ராஜெக்ட்டில் இருந்து நீக்கிவிட்டார்கள்.

இதனால் விக்னேஷ் சிவன் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி அதிக அளவில் பெயரை கெடுத்துக் கொண்டார். இத்துடன் இவர் சினிமா கேரியர் மொத்தமும் முடிந்துவிடும் என்றெல்லாம் வாய்க்கு வந்தபடி தாறுமாறாக இஷ்டத்துக்கு பேசினார்கள். ஆனால் அதற்கெல்லாம் கொஞ்சம் கூட அசராமல் திரும்பி வரவேண்டும் என்று முழு முயற்சியுடன் களத்தில் இறங்கி இருக்கிறார்.

அதன் விளைவாக இவருக்கு நெருங்கிய நண்பராக இருக்கும் விஜய் சேதுபதியிடம் ஒரு கதையை சொன்னார். அவரும் இந்த கதை கேட்ட பிறகு நான் நடித்துக் கொடுக்கிறேன் என்று சம்மதத்தை தெரிவித்து இருக்கிறார். அடுத்து இந்த கதைக்கான படத்தை யார் தயாரிக்கப் போகிறார் என்று பெரிய குழப்பத்தில் இருந்தார்.

அந்த நேரத்தில் இவருக்கு துணையாக ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் கை கொடுத்திருக்கிறது. இந்த வாய்ப்பு நயன்தாரா மூலமாக விக்னேஷ் சிவனுக்கு கிடைத்திருக்கிறது என்றே சொல்லலாம். இப்பொழுது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்க அந்த படத்தை கூடிய விரைவில் ராஜ் கமல் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. மேலும் இதுகுறித்து அறிவிப்புகள் கூடிய விரைவில் வெளிவந்து விடும்.

மேலும் இவரை அஜித் நிராகரித்த பின் துவண்டு போய்விடுவார் என்று நினைத்தவர்களுக்கு அவர்கள் வாயை அடைக்கும் அளவிற்கு இப்பொழுது ஒரு ஹேப்பி நியூஸ் கொடுத்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் இந்த படத்திற்கான ஷூட்டிங்கை ஏப்ரல், மே மாதங்களில் துவங்கப் போவதாக தகவல் வெளிவந்துள்ளது.

ஏனென்றால் அப்பொழுது தான் அஜித் படமான ஏகே 62 படமும் உருவாக இருக்கிறது. அதனால் அதற்கு போட்டியாக இந்த படத்தை உருவாக்கி அஜித் படம் வெளியாகும் போது இவரின் படத்தையும் வெளியிட வேண்டும் என்று நினைப்பில் ஒவ்வொன்றையும் பார்த்து செய்து வருகிறார்.