நயன்தாரா தமிழ் சினிமாவில் கஷ்டப்பட்டு ஒரு இடத்திற்கு வருவதற்குள் அவர் பல இன்னல்களை சந்தித்தார் மற்றும் அவமானங்களையும் சந்தித்து இப்பொழுது லேடி சூப்பர் ஸ்டாராக இருந்து வருகிறார். நன்றாக இருந்த அவரது வாழ்க்கையில் எப்படியாவது திருமண வாழ்க்கையில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணத்தில் விக்னேஷ் சிவனை காதலித்து அதிலும் சிரமப்பட்டு திருமணம் செய்து கொண்டார்.
இதில் முக்கியமாக விக்னேஷ் சிவன் வந்ததற்கு பிறகு அவர் வாழ்க்கையில் சந்தோஷம் வந்ததோடு சேர்த்து பிரச்சினையும் அதிகமாக வந்து கொண்டிருக்கிறது என்று அனைவருக்கும் தெரியும். அவரது திருமணம் நடைபெறுவதற்கு பல வருடங்கள் காத்திருந்து திருமணத்தை செய்தார்கள். அந்த திருமணத்தை திருப்பதியில் நடத்த முடிவு செய்த நயன்தாரா திடீரென ஒரு ஹோட்டலில் நடத்தி அதை 25 கோடிக்கு விற்றது விக்னேஷ் சிவனின் வேலையாக இருக்கக்கூடும் என்று இப்போது தெரிகிறது.
இப்பொழுது முக்கியமாக வாடகைத்தாய் பிரச்சனை தமிழகம் முழுவதும் இவரைப் பற்றி தமிழக அரசு வரை பேசிக் கொண்டிருக்கிறது. இவர் மீது விசாரணை வைக்க வேண்டும் கைது பண்ண வேண்டும் என்ற குரல்களும் விழுந்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில் ரசிகர்கள் பல நிலைகளில் பேசிக்கொண்டும் நயன்தாரா மீது வருத்தப்பட்டு கொண்டும் இருந்து வருகின்றனர்.
எதற்குமே வாய் திறக்காமல் மௌனம் சாதிக்கிறார் என்ற ஒரு பேச்சு எழுகிறது ஆனால் அவர் அப்படிப்பட்டவர் இல்லை. இதற்கெல்லாம் காரணம் விக்னேஷ் சிவன் தான் என்ற எண்ணம் இப்பொழுது அனைத்து ரசிகர்களுக்கும் தோன்றுகிறது. இதனால் விக்னேஷ் சிவன் நயன்தாரா வாழ்க்கையில் வந்த பிறகுதான் இப்படிப்பட்ட சூழ்நிலையில் நயன்தாரா சிக்கி இருக்கிறார் என்று ஆணித்தரமாக ரசிகர்கள் சொல்லுகிறார்கள்.
இதனால் விக்னேஷ் சிவன் நேரடியாக ரசிகர்களுக்கு ஒரு பேட்டி அளித்து இதற்கான தீர்வை காணவேண்டும். அப்போதுதான் இதற்கெல்லாம் விடை கிடைக்கும் நயன்தாராவும் பழைய நிலைக்கு திரும்பவும் நடிக்க தொடங்க முடியும். இவ்வளவு பிரச்சினைக்கும் நயன்தாரா ஒரு வார்த்தை கூட பேசாமல் இருந்து வருகிறார் என்ற சந்தேகம் எழுகிறது இதற்கெல்லாம் முடிவு கட்ட இது தான் ஒரே தீர்வு என்று ரசிகர்கள் கருதுகிறார்கள்.
விக்னேஷ் சிவன் மீது தவறு என்று சொல்ல முடியாது அவர் ஒரு மிடில் கிளாஸ் ஃபேமிலி இல் இருந்து வந்தவர். அதனால் அவர் ஒரு நடிகை திருமணம் செய்து கொண்டதால் அவரை தன் கட்டுப்பாட்டிற்குள் அவரை நல்ல முறையில் நடத்த வேண்டும் என்று செய்திருக்கலாம் ஆனால் அது நயன்தாராவிற்கு பொருந்தவில்லை என்பதே நிதர்சனம்.