விஜய் 66 பட கதை இதுதானா? ஓஹோ இதுக்குத்தான் கேரள வரை சென்றாரா!

பீஸ்ட் திரைப்படத்திற்கு அடுத்ததாக விஜய் தன்னுடைய 66வது திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தை இயக்குனர் வம்சி இயக்குகிறார். தெலுங்கில் பிரபல தயாரிப்பாளராக இருக்கும் தில் ராஜூ இப்படத்தை தயாரிக்கிறார்.

தமிழ் மற்றும் தெலுங்கு இரு மொழிகளில் உருவாகும் இந்தப் படம் பற்றிய அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்பு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து இந்த படத்தின் கதை இதுதான் என்று பல செய்திகள் ஊடகங்களில் வெளிவந்தது.

மேலும் விஜய் இந்த படத்தில் இரு வேடங்களில் நடிப்பதாகவும், நோயாளியாக நடிப்பதாகவும் பல செய்திகள் வெளியானது. தற்போது காதலை மையமாகக் கொண்ட இந்த விஜய் 66 படத்தின் கதை பற்றிய வேறு ஒரு தகவலும் வெளியாகியுள்ளது.

அதாவது விஜய் நடிப்பில் பல காதல் திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. அதில் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த திரைப்படம் என்றால் அது காதலுக்கு மரியாதை, துள்ளாத மனமும் துள்ளும் ஆகிய திரைப்படங்கள் தான்.

இந்த மாதிரி ஒரு கலவையான கதைதான் விஜய் 66 என்று ஒரு தகவல் தெரிவிக்கிறது. இந்த படத்திற்காக இளமையான விஜய் வேண்டும் என்று வம்சி கேட்டதால் கேரளா வரை சென்று ஆயுர்வேத மருத்துவம் எடுத்துக் கொண்டு இருபது வயதை குறைத்துள்ளார் விஜய்.

ஆனால் உண்மையில் இந்த படத்தின் கதை காதல் மற்றும் நகைச்சுவையை மையமாக கொண்டு எடுக்கப்பட இருக்கிறதாம். இந்த படத்தின் இயக்குனர் வம்சி கடந்த 2010ஆம் ஆண்டு ஜூனியர் என்டிஆரை வைத்து பிருந்தாவனம் என்ற ஒரு குடும்ப நகைச்சுவை திரைப்படத்தை இயக்கியிருந்தார்.

அப்படத்தில் காஜல் அகர்வால், சமந்தா ஆகியோருடன் இணைந்து ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருப்பார்கள். தற்போது அதை மையமாக வைத்துதான் இந்த விஜய் 66 திரைப்படத்தின் கதை இருக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதனால் தற்போது ஆக்ஷன் படங்களில் மிகவும் மிரட்டலாக பார்த்து வந்த விஜய்யை நாம் மீண்டும் பூவே உனக்காக திரைப்படத்தில் வருவது போன்ற ஒரு துள்ளலான கேரக்டரில் பார்க்க முடியும். இந்த படத்திலும் ஏகப்பட்ட நட்சத்திரங்கள் இருக்கப் போகிறார்கள் என்பது உறுதி. இதனால் விஜய் 66 படம் குறித்து வெளிவர இருக்கும் அப்டேட்களை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.