தளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் நெல்சன் திலீப் குமாரின் இயக்கத்தில் வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி பீஸ்ட் திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. அனிருத் இசையில் வெளியாக உள்ள இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. அண்மையில் இத்திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களை ஆட்டம் போட வைத்தது.
பீஸ்ட் ட்ரெய்லரில் ஒரு மாலில் துப்பாக்கி முனையில் பொது மக்களை பிடித்து வைத்துக் கொண்டுள்ள தீவிரவாதிகளிடமிருந்து காப்பாற்ற போராடும் வீரராகவன் கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் நடித்துள்ளார். பயமா இருக்கா, இனிமேல் பயங்கரமாயிருக்கும் போன்ற விஜய்யின் வசனங்கள் இத்திரைப்படத்தின் டிரைலரில் இடம் பெற்று ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தில் காட்டப்பட்ட மால் முழுக்கமுழுக்க செட் என்று இத்திரைப்படத்தின் படக்குழுவினர் தெரிவித்தனர்.
செட் போல இல்லாமல் தத்ரூபமாக உண்மையான மால் போல இந்த படத்தின் ஆர்ட் டைரக்டர் அமைத்திருப்பார். இந்த நிலையில் நடிகை சமந்தா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடந்த வருடம் நவம்பர் மாதம் புகைப்படம் ஒன்றை வெளியிட்டார். அதில் பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற மாலினை புகைப்படம் எடுத்து சமந்தா வெளியிட்டிருந்தார்.
இதை தற்போது கவனித்த ரசிகர்கள் இத்திரைப்படத்தில் சமந்தாவும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்து இருக்கக்கூடும் என பரவலாக பேசி வருகின்றனர். மேலும் இப்படத்தில் சமந்தா ஒரு முக்கியமான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருப்பதால் தான் சஸ்பென்சாக வைத்திருப்பதாகவும் பலரும் கூறி வருகின்றனர். ஆனால் சமந்தா ரேஞ்சுக்கு இத்திரைப்படத்தில் நடிக்கிறார் என்றால் கண்டிப்பாக அப்டேட் வந்து இருக்கும். தற்போதுவரை பீஸ்ட் சமந்தா நடிப்பதாக எந்த ஒரு அதிகாரப்பூர்வ அப்டேட் வராத நிலையில், இந்த புகைப்படத்தை ரசிகர்கள் இணையத்தில் வெளியிட்டு வைரலாக்கி வருகின்றனர்.

ஒருவேளை சமந்தா வேறு படத்தின் ஷூட்டிங்கிற்காக ஒரு ஹோட்டல் அறையில் தங்கி கொண்டிருக்கும்போது புகைப்படத்தை வெளியிட்டு இருக்கக்கூடும் என நெட்டிசன்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் பீஸ்ட் திரைப்படத்தின் மிகப்பெரியஅப்டேட்டை சமந்தா கடந்த வருடம் நவம்பர் மாதத்திலேயே கொடுத்துள்ளார் என்பதுதான் எதார்த்தம்.