என்றுமே தமிழருக்காக குரல் கொடுக்கும் விஜய்.. ஆனா இப்ப வரைக்கும் இவர் யாரு புரிஞ்சுக்கல

விஜய் படங்கள் அனைத்தும் வசூல் ரீதியாக அனைவருக்கும் வியாபார ரீதியாக வெற்றி பெறுகிறது. மிகுந்த பரபரப்பில் அமைந்த கூட்டணி சன் பிக்சர்ஸ், விஜய், நெல்சன், அனிருத் பிரம்மாண்டமான கூட்டணியில் முடிவு செய்யப்பட்டு படம் தொடங்கியது. பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் பல செய்திகள் வெளிவந்தன.

படத்தின் பாடல்கள் யாரும் எதிர்பார்க்காத அளவில் உலக மக்களால் ரசிக்கப்பட்டது. ஏப்ரல் 13-ஆம் தேதி படம் வெளிவந்தது பல கலவையான விமர்சனங்களை பெற்று விஜய்க்கு கெட்ட பெயர் வாங்கி கொடுத்தது. படம் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை. இன்றளவும் பல மோசமான விமர்சனங்களை பெற்று வருகிறது.

விஜய் தரப்பில் இருந்து எந்த பதிலும் வரவில்லை. இயக்குனர் தரப்பில் இருந்து வந்த தகவல் விஜய்க்கு இயக்குனர் குடும்பம் கலந்த காமெடி கதையை சொல்லியிருக்கிறார். விஜய்க்கும் பிடித்துப்போக அந்தக்கதையை ஆக்சன், காமெடி கலந்த கதையாக மாற்றும்படி இயக்குனருக்கு விஜய் அறிவுறுத்தி உள்ளார். விஜய் கால்ஷீட் கிடைத்து விட்டது என்ற சந்தோஷத்தில் அவரும் சரி என்று சொல்ல படம் தோல்வியை நோக்கி சென்றது.

விஜய் 66 படத்தின் தொடக்க விழா நடைபெற்று முதல்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் முடிவடைந்தது. அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடத்துமாறு விஜய் கேட்டுக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பெப்சி தொழிலாளர்களுக்காக சென்னையில் நடத்த வேண்டும் என்று ஆசைப்பட்டு உள்ளார் விஜய். இதனை ஏற்று தயாரிப்பு நிறுவனம் சம்மதம் தெரிவித்துள்ளது.

விஜய் அவர்கள் அனைத்து விஷயங்களிலும் மூக்கை நுழைக்கிறார். அதை மாற்ற வேண்டும் இதை மாற்ற வேண்டும் என்று கேள்வி கேட்டு மாற்றம் செய்ய சொல்கிறார் என்று தயாரிப்பு நிறுவனம் குழம்பிக் கொண்டிருக்கிறது. விஜயின் தலையீடு காரணமாக பீஸ்ட் படம் தோல்வியை தழுவியது. இதன் காரணமாக தயாரிப்பு நிறுவனம் பயந்து கொண்டு இருக்கிறது.

தயாரிப்பு நிறுவனம் விஜயிடம் நீங்கள் நடிப்பை மட்டும் பார்த்துக் கொள்ளுங்கள் மற்றதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். நீங்கள் நினைத்ததை விட படம் உங்கள் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் அதற்கு நாங்கள் உறுதி அளிக்கிறோம் என்று விஜய்க்கு நேர்பட கூறிவிட்டார்களாம். விஜய்க்கு தமிழ் இயக்குனர்களும் உள்ள மரியாதை தெலுங்கு இயக்குனர்களிடம் இல்லை என்பது தெரிகிறது.