நடிகர் விஜய்யின் நடிப்பில், இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்கத்தில் வாரிசு திரைப்படம் உருவாகி வருகிறது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் ஹைதராபாத்தில் மாறி,மாறி படப்பிடிப்பு எடுக்கப்பட்டு வரும் நிலையில் கடைசிக்கட்ட படப்பிடிப்பில் வாரிசு திரைப்படம் உள்ளது.
இதனிடையே இரண்டு நாட்களுக்கு முன்பு வாரிசு திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் காட்சி ஒன்று படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட நிலையில்,சில நிமிட வீடியோ காட்சிகள் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியில் உள்ளாக்கியது. பொதுவாக முன்னணி நடிகர்களின் திரைப்பட படப்பிடிப்பின்போது இப்படிப்பட்ட செயல்கள் நடைபெறுவது அண்மையில் வழக்கமாக உள்ளது.
இருந்தாலும் படப்பிடிப்பின்போது உள்ளே வேலை செய்யும் பிரபலங்கள்,டெக்னீஷியன்கள் மொபைல் போன் உள்ளிட்டவை பயன்படுத்துவதற்கு தடையும் உள்ளது. இருந்தாலும் எப்படியோ சில படப்பிடிப்பு தளத்தில் அத்துமீறி எடுக்கப்படும் காட்சிகள் வெளியாகி இணையத்தில் லீக் செய்யப்படுகிறது.
இந்த நிலையில் வாரிசு திரைப்படத்தின் பாடல் காட்சி வெளியானதால் ,விஜய்க்கு பெருமளவில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவை பார்க்கும் போது யாரோ ஒருவர் மேலிருந்து கேமராவை வைத்து வீடியோ எடுத்துள்ளது போல் உள்ளது. இந்நிலையில் லைட்மேன்கள் தான் அதிகமாக மேலிருந்து படப்பிடிப்பில் வேலை செய்வார்கள்.
இதனிடையே மொத்த லைட்மேன்களையும் உடனடியாக அழைத்து பேசிய விஜய், நெருப்பாய் மாறி கொந்தளித்துள்ளாராம். வாரிசு திரைப்படம் வரும் பொங்கலன்று ரிலீசாக உள்ள நிலையில், இப்படத்தில் உயிரைக் கொடுத்து வேலை செய்யும் பல தொழிலாளர்களுக்கும், இது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை உணர்த்தி விஜய் கோபமாக அனைவரையும் எச்சரித்துள்ளார்.
இது குறித்து வாரிசு படக்குழுவிலிருந்து வெளியான செய்தியில், நடிகர் விஜய்யை இவ்வளவு கோபமாக படப்பிடிப்பு தளத்தில் தாங்கள் பார்த்ததில்லை என்றும் விஜயின் கோபத்தை பார்த்த இயக்குனர் வம்சி முதற்கொண்டு, அணைத்து வாரிசு படக்குழு தொழிலாளர்களும் அதிர்ந்து போய் விட்டனர் என்று தெரிவித்துள்ளனர்.